அண்ணாமலை உயிருக்கு ஆபத்து… அதிரடி முடிவெடுத்த மத்திய அரசு!

தமிழக பாஜக தலைவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனையடுத்து மாநில அரசால் ‘ஒய் பிளஸ்’ பிரிவு வழங்கப்பட்டு அது கடந்த சில மாதங்களுக்கு முன் அது ‘எக்ஸ்’ பிரிவு பாதுகாப்பாக குறைக்கப்பட்டது.
இதனை அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினர் கடுமையாக எதிர்த்தனர்.கடந்த சில நாட்களுக்கு முன் அண்ணாமலைக்கு நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்த நபர் கொலை மிரட்டல் விடுத்தார். இதனையடுத்து அந்த நபர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் அண்ணாமலைக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய அரசுக்கு நுண்ணறிவு பிரிவு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில், அவருக்கு ’ஒய்’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்த அடிப்படையில் அண்ணாமலைக்கு 2 தனிப்பாதுகாப்பு அதிகாரிகள் உள்பட 11 பேர் கொண்ட ஆயுதமேந்திய சிஆர்பிஎஃப் வீரர்கள் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) மற்றும் மாநில போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.