அந்த வார்த்தையை கேட்டாலே ஸ்டாலினுக்கு அலர்ஜி… திமுகவை எச்சரித்த எடப்பாடி!

மக்கள் இப்படியே கடந்து சென்று விடுவார்கள் என்று எண்ணி விடாதீர்கள் மிக பெரிய போராட்டத்தை மக்கள் நடத்த போகிறார்கள்இதனை எச்சரிக்கையாக கூறி கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்தார்.
தமிழ்நாடு அரசு சொத்து வரியை அதிகரித்ததைக் கண்டித்து, திருச்சி ரயில் நிலையம் முன்பு, சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, மக்கள் இப்படியே கடந்து சென்று விடுவார்கள் என்று எண்ணி விடாதீர்கள் மிக பெரிய போராட்டத்தை மக்கள் நடத்த போகிறார்கள்இதனை எச்சரிக்கையாக கூறி கொள்ள விரும்புகிறேன் எனத் தெரிவித்தார். கதவனை கட்ட நாங்கள் நடவடிக்கை எடுத்தோம் அதையும் கைவிட்டு விட்டார்கள். என்னென்ன நல்ல திட்டங்களை எல்லாம் நாம் கொண்டு வந்துள்ளோமோ அதை எல்லாம் கை விட்டு விட்டார்கள் என திமுகவை கடுமையாக விமர்சித்தார்.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருகிறது – சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது,காவல் துறை செயல் இழந்து விட்டது.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வோம் என அறிவித்தார். கண்டிப்பாக இதனை தடை செய்ய வேண்டும். இளைஞர்கள், மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை. இதனை எல்லாம் சரியாக செய்யவில்லை என்றால் திமுகவிற்கு எதிர்காலமே இருக்காது.திராவிட மாடல் இது தானா? அம்மா மினி கிளினீக் இப்போது மூடி விட்டார்கள். அம்மா என்கிற பெயரை கேட்டாலே ஸ்டாலினுக்கு அலர்ஜி ஆகி விடுகிறது.
*மின் வெட்டு இப்போது தான் ஆரமித்து உள்ளது. இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த துன்பமும் இல்லை என்கிறார், ஆட்சி இருப்பதே துன்பம் தானே என கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.