ஐ.நா. வழங்கிய அறிவுரை..! இலங்கையில் அவசர நிலை வாபஸ் பெறப்பட்டது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் ராஜபக்சே குடும்பம் ஆட்சியை விட்டு விலக வேண்டும் என இலங்கை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் மக்களை கட்டுக்குள் கொண்டு வர  பிரதமர் மகிந்த ராஜபக்சே ஊரடங்கு மற்றும் அவசர நிலையை அமல்படுத்தி மக்களை போராட்டத்தில் ஈடுபடாமல் தடுத்து நிறுத்தினார். 

அரசின் இந்த செயலானது மனித உரிமை மீறல் என இலங்கை மனித  உரிமை ஆணையம் குற்றம் சாட்டியது. மேலும் இலங்கையில், பொருளாதார நெருக்கடியை தாண்டி அரசியலிலும் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. கூட்டணி கட்சிகள் விலகல் மற்றும் எதிர் கட்சிகளின் போராட்டம் என இலங்கை அரசு தடுமாறி வருகிறது.  இந்த நிலையில் மகிந்த ராஜபக்சே கட்சியில் உள்ள 26 அமைச்சர்கள் விலகினார்கள்.

அதை தொடர்ந்து 4 இடைக்கால அமைச்சர்களை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி அமர்த்தினர். ஆனால் பதவியேற்ற 24 மணி நேரத்தில் நிதி அமைச்சர் அலி சப்ரி பதவி விட்டு விலகியது  அரசியலில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதலில் அரசியல் உள்ள குழப்பத்தை சரி செய்யுங்கள் அப்போதுதான்  பொருளாதார பிரச்சனை சரி செய்ய முடியும் என ஐ.நா சபை   இலங்கைக்கு அறிவுரை வழங்கியுள்ளது.

போராட்டம் அமைதியான முறையில் நடந்தபோது, இலங்கை அரசு அத்துமீறி நடந்து கொள்வது சரியல்ல என்றும், நிலைமையை சரி செய்ய  எதிர்க்கட்சிகளும் அரசு ஆலோசனை நடத்தி பொருளாதார நிலையை சரிசெய்ய வேண்டும் என்று  ஐ.நா அறிவுறுத்தியுள்ளது. ஐ.நா. அறிவுரை வழங்கிய நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக மாட்டார் என தற்போது செய்தி வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.