பெரு நாட்டில் நிலவும் ஊரடங்கு.. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்.. 

பெரு நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை உயர்த்து வரும் நிலையில் அந்நாட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நாளுக்கு நாள் உயரும் எரிபொருளின் விலையால்  மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டு உள்ளனர். 

இதன் விளைவாக மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தலைநகர் லிமாவில் நடைபெற்ற போராட்டத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 

 உடனடியாக எரிபொருள் மற்றும் சுங்கக் கட்டண விலை உயர்வை குறைக்க வேண்டும் என மக்கள் கோஷம் போட்டபடி அரசை எதிர்த்து போராடினர். பெரு நாட்டில் பெட்ரோல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை கடந்த ஆண்டைக் காட்டிலும் 37 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

அந்நாட்டு அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை இந்த மாதம் முதல் 10 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை போல பெரு நாட்டிலும் பொருளாதார நெருக்கடி சந்திக்கப்போவதாக உலக அமைப்பு தெரிவித்துள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.