பாகிஸ்தானில் நம்பிக்கையில்லா தீர்மானம்.. உச்சநீதிமன்றம் அதிரடி  தீர்ப்பு..

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள  பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் காரணமாக பிரதமர் இம்ரான் அரசு பதிவு விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து  போராடி வருகிறது.  இதன் விளைவாக  நாடாளுமன்றத்தில்  இம்ரான் அரசு  மீது   நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன  எதிர்க்கட்சிகள். 

ஆனால் அதை  துணை சபாநாயகர் காசிம் சூரி, பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது பாகிஸ்தான் அரசியல் அமைப்புக்கு எதிரானது என  கூறி நிராகரித்தார்.  இதன் காரணமாக  ஜனாதிபதி ஆரிப் ஆல்வி  நாடாளுமன்றத்தை கலைத்து  உத்தரவு பிறப்பித்தார். 

ஆனால்  எதிர்க்கட்சிகள் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் தலைமையிலான 5 நீதிபதிகள் இந்த வழக்கை தொடர்ந்து  விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.  அவர்கள் அளித்த தீர்ப்பின்படி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்பட எந்தவித  தடையில்லை எனவும் தீர்ப்பு வழங்கியுள்ளது.  அதன்படி நாளை  காலை 10 மணிக்கு மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இதில் பிரதமருக்கு எதிரான இந்த தீர்மானம் வெற்றியடைந்தால் புதிய பிரதமரை நாடாளுமன்றம் நியமிக்கலாம்  எனவும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். உச்ச நீதிமன்ற தீர்ப்பு பாகிஸ்தான் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக இம்ரான் கான், தனது கட்சி எம்.பி.களுடன்  இன்று  மாலை அவசர கூட்டம்  நடத்தி ஆலோசிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

Leave a Reply

Your email address will not be published.