வன்னியர் உள் ஒதுக்கீடு விவகாரம்… முதல்வருடன் அன்புமணி திடீர் சந்திப்பு!

anbumani

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக இளைஞரணி அன்புமணி இராமதாஸ் தலைமையில் 7 பேர் கொண்ட குழு இன்று சந்தித்தனர்.

வன்னியர் இட ஒதுக்கீட்டை மீண்டும் நடைமுறைப்படுத்த கூடுதல் புள்ளி விவரங்களைத் திரட்டி புதிய சட்டம் கொண்டு வர வலியுறுத்தி, முதல்வர் மு.க.ஸ்டாலினை அன்புமணி தலைமையிலான பாமக குழு இன்று சந்தித்தது.

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்த அன்புமணி ராமதாஸ், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மூலம் புள்ளி விவரங்களை தொகுத்து, ஆய்வு செய்து அவற்றின் அடிப்படையில் வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக்கான பரிந்துரை பெற கோரிக்கை விடுத்தார்.

புதிய வன்னியர் இட ஒதுக்கீட்டு சட்ட முன்வரைவை மிக விரைவாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…