ஸ்டாலினை ஆதரித்த அதிமுக… அதிருப்தியுடன் நடையைக் கட்டிய பாஜக!

க்யூட் தேர்வுக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தனித் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் உரையாற்றினர். க்யூட் தேர்வு, பெயரில் வேண்டுமானால் க்யூட்டாக இருக்கலாம், ஆனால் இது க்யூட் தேர்வு கிடையாது என தமிழக வாழ்வுரிமை கட்சி எம்எல்ஏ வேல்முருகன்
விமர்சித்தார்.

இதனை தொடர்ந்து பேசிய மமக எம்எல்ஏ ஜவாஹிருல்லா, அப்துல் கலாம், அனந்தகிருஷ்ணன் உள்ளிட்டோர் எந்த நீட் தேர்வையும், க்யூட் தேர்வையும் எழுதவில்லை என குறிப்பிட்டார்.

மேலும், அதிமுக, பாமக, இடதுசாரிகள், விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சி எம்எல்ஏக்கள் முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

பாஜக உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனை அடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்இதனை தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனித்தீர்மானத்திற்கு ஆதரவு அளித்த அனைத்துக் கட்சி எம்எல்ஏக்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டார்.

மேலும், தீர்மானம் என்பது தமிழ்நாட்டு மக்களின் உணர்வு என்றும்,

தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், க்யூட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.