செந்தில் பாலாஜி மீதான வழக்குகள் ரத்து… உயர் நீதிமன்றம் உத்தரவு!
கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நான்கு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், திமுக-வினர் மீது பொய் வழக்கு போடும் நடவடிக்கையை கைவிடக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் 2020ஆம் ஆண்டு கரூரில் நடந்த போராட்டம், உண்ணாவிரதம் தொடர்பான நான்கு வழக்குகள் தொடரப்பட்டன.
கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுப்பட்டதாக அரசு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு செந்தில் பாலாஜி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பொது நலனுக்காகவே போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், விதிமுறைகள் எதையும் மீறவில்லை எனவும் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
இதனையடுத்து கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான நான்கு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.