இனி காஞ்சி மக்களுக்கு அந்த பிரச்சனை இல்ல… அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!

KN Nehru

தமிழகத்திலுள்ள வளர்ச்சி பெற்ற நகரங்களில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

ராயபுரம் சிமெண்ட் சாலை பகுதியில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என ஐடிரீம்ஸ் மூர்த்தி கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிமெண்ட் சாலை மிகவும் குறுகலான பகுதி அங்கு அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைப்பது என்பது வாய்பு இல்லை எனவே, வண்ணாரப்பேட்டை ராபின்சன் பார்க் அருகே அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார்.

மேலும் வண்ணாரப்பேட்டை மெட்ரோ ரயில் நிலைய பகுதியிலும் வாகன நிறுத்தம் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். வர்த்தகப் பகுதி மேற்கொள்ளக்கூடிய எம் சி சாலை மேலும் அகலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கு போதிய வசதிகள் ஏற்படுத்தப்படும்
எனத் தெரிவித்தார்.

பட்டு உற்பத்திக்கு புகழ்பெற்ற காஞ்சிபுரம் நகரில் வாகன நிறுத்தம் அமைக்க திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலஅரசன் கேள்வி எழுப்பினார். வளர்ச்சி பெற்ற காஞ்சிபுரம் மாவட்டத்திலும் வாகன நிறுத்தம் அமைக்கப்படுவது தேவையாக உள்ளது அங்கு போதிய இடம் கிடைக்கிற பட்சத்தில் உடனடியாக வாகனம் தோட்டம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்டிடம் போலல்லாமல் இரும்பு பீம் கொண்டு எளிய செலவில் கட்டி முடிக்கலாம், இதுபோன்று திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் வாகனங்களுக்கு பன்னடுக்கு வாகன நிறுத்தம் ஏற்பாடு செய்யப்படுமா என சட்டசபை துணை சபாநாயகர் பிச்சாண்டி எழுப்பிய கேள்விக்கு,

திருவண்ணாமலை மாவட்டத்திலும் இடம் கிடைப்பதன் அடிப்படையில் அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என அமைச்சர் நேரு விளக்கம் அளித்தார். திருவண்ணாமலையும் அதை நடைமுறைப்படுத்த சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும்.

அதுமட்டுமல்லாது வியாபார பகுதிகளில் பன்னடுக்கு வாகன நிறுத்த ஏற்பாடு செய்யப்படும். நகராட்சி இடம் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவற்றை செயல்பட நடவடிக்கை எடுக்கப்படுமென நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.