BREAKING துரைமுருகன் அப்பல்லோவில் அனுமதி… அதிர்ச்சியில் அறிவாலயம்!

தமிழக நீர்வளத்துறை அமைச்சரான துரைமுருகன் காய்ச்சல் காரணமான சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. இதன் இரண்டாவது பகுதி ஏப்ரல் 6ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு துறைகளின் கீழ் அமைச்சர்கள் அறிவிப்பு வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. காய்ச்சல் காரணமாக நேற்று இரவு அமைச்சர் துரைமுருகன் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் கண்காணிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் துரைமுருகனை தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.