ஆ.. அப்படித்தான் ஆரம்பீங்க… பாஜக எம்எல்ஏ.க்களை தெறிக்கவிட்ட அமைச்சர் பொன்முடி!

பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மறுபரீசிலனை செய்ய பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கு அமைச்சர் பொன்முடி நெத்தியடி பதிலடி கொடுத்துள்ளார்.
பேரவையில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன் பொது நுழைவுத் தேர்வுக்கு எதிரான தீர்மானத்தை மறுபரீசிலனை செய்ய கோரியதற்கு பேச்சுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பதிலளித்துள்ளார்.
பொது நுழைவுத் தேர்வுக்கு கேரளாவில் எந்த எதிர்ப்பும் இல்லை. நான் அதற்குள் போக விரும்பவில்லை.மாநில அரசு பல்கலைக்கழகம் விரும்பினால் சேர்த்து கொள்ளலாம் என UGC அறிக்கையில் உள்ளது.
நீட் தேர்வு வரப்ப இப்படி தான் விரும்பினால் சேர்ந்து கொள்ளலாம் என்று தான் ஆரம்பித்தீர்கள். இப்படி தான் ஆரம்பீங்க. இதை விரிவுபடுத்த வாய்ப்பு உள்ளது. அதை தடுத்து நிறுத்த வேண்டிய முன்னெச்சரிக்கை உள்ளது என பாஜகவினருக்கு நெத்தியடி பதிலடி கொடுத்தார்.