சொந்த புத்தி இல்லாத கட்சி… பாஜகவை வெளுத்து வாங்கிய முத்தரசன்!

சுய சிந்தனை இல்லாமல் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு துணை நிற்கும் கட்சிதான் பாஜக என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை துறைமுகம் ராஜாஜி சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தினோம்.
டாக்டர் அம்பேத்கர் சாதி இல்லாத பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத ஒரு சமூக சமத்துவத்திற்கான போராடிய மாபெரும் தலைவர், அவள் லட்சியம் உறுதியாக நிச்சயமாக நிறைவேறும் நாளில் சபதம் எடுக்கிறோம்.
முதலமைச்சர் அவர்கள் இந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து விருதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது.
மாநில ஆளுநர் இன்று அரசியல் அமைப்பு கட்சிகளுக்கு தேநீர் விருந்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்,நீட் உள்ளிட்ட மசோதாக்களை ஆளுநர் நிறைவேற்றாமல் இன்னும் புழக்கத்தில் வருவதால்,இந்திய கம்யூனிஸ்ட் சார்பாக தேநீர் விருந்தை நாங்கள் புறக்கணிக்கிறோம்.
பாஜக ஒரு இரட்டை வேடம் போடுகின்ற ஒரு கட்சி ஆர்எஸ்எஸ் உடைய துணை அமைப்பு தான் பாஜக சுயமாக சிந்தித்து செயல்படாது எந்த புத்தியும் கிடையாது ஆர்எஸ்எஸின் அடிமை அமைப்புதான் பாஜக.
ஒரு பக்கத்தில் மாமிசம் சாப்பிட்டால் மாணவர்களை தாக்குவார்கள், ஒரு பக்கம் ஜாதி பாகுபாடு இருக்கக்கூடாது என்று போராடிய ,அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரை கொண்டாடுவது போல் நடிக்கிறார்கள்.
பாஜகவின் அமித்ஷாஹிந்தி ஒரு பக்கத்தில் ஹிந்தியை துணைக் தருகிறார்,இங்குள்ள தலைவர் இந்தியை ஒருபோதும் நினைக்க மாட்டோம் என்று சொல்கிறார்கள் ஆக மொத்தத்தில் இரட்டை வேடம் போடுகிறார்கள் என வெளுத்து வாங்கியுள்ளார்.