டீ குடிக்கிறதுல கூட அரசியலா?… ஆளுநருக்கு அப்பட்டமாக முட்டு கொடுக்கும் ஜி.கே.வாசன்!

கல்வியில் அரசியலை புகுத்த கூடாது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
கல்வியில் அரசியலை புகுத்த கூடாது என ஆளுநர் மாளிகை தேநீர் விருந்தில் பங்கேற்ற பின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற தேநீர் விருந்தில் பங்கேற்ற பின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே வாசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்
ஆளுநர் மாளிகையில் தேனீர் விருந்து அளிக்கும் நிகழ்ச்சி வழக்கமான ஒன்று. இது மரியாதை நிமித்தமாக கலந்து கொள்வது என்பது வழக்கம். இது போன்ற நிகழ்ச்சிகளில் அரசியல் தவிர்ப்பது நல்லது சீரான நிர்வாகத்து உகந்ததல்ல என்பது என்னுடைய கருத்து.
கல்வியில் அரசியலை புகுத்த கூடாது.தமிழ் நாட்டில் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குழம்பி கொண்டுள்ளனர். அரசியல் செய்து மேலும் குழப்ப கூடாது. என தெரிவித்தார்