பாஜக மதம் பற்றி பேசினால்… வாண்டடாக வந்து வக்காலத்து வாங்கும் ஜி.கே.வாசன்!

தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு மரியாதை செலுத்தினார்

.அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் ராஜாஜி சாலையில் அமைந்துள்ள அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு
மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விவசாயிகள் நலன் கருதி தமிழகத்தில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் எம்பிகளுக்கான ஒதுக்கீட்டை அனுமதிப்பதோடு, அதிகரிக்கப்பட வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகத்துக்கு கோரிக்கை வைக்கிறேன்.

பெட்ரோல் டீசல் விலையை குறைக்க பல்வேறு நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

த.மா.கா மத நல்லிணக்கத்தோடு தான் பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது. கோவிலிலோ, மசூதியிலோ, சர்ச்சிலோ பிரச்சனை என்றால் அதைப்பற்றி பாஜக பேசினால் அதை திமுக அரசியலாக்க கூடாது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…