எங்க தொண்டர்கள் மேல கைய வச்சிட்டாங்க… கமிஷனர் அலுவலக படியேறிய பாஜக முக்கிய புள்ளி!

பாஜக தொண்டர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கட்சியின் சார்பில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் நேற்றைய தினம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வின்போது பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது இதனிடையே இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் விபி துரைசாமி வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பால்கனகராஜ் உள்ளிட்டோர் காவல் ஆணையரை சந்தித்து புகார் அளித்தனர்.

அந்த மனுவில் பாஜக தொண்டர்களை தாக்கிய விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகாரில் தெரிவித்துள்ளனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வி.பி துரைசாமி

மோதல் ஏற்படுவதற்கு பாஜகவினரே காரணம் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுத்த துரைசாமி பாஜகவினர் ஒருபோதும் வன்முறையை கையில் எடுக்க மாட்டார்கள் என கூறினார்

.திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியை தரக் குறைபாக விமர்சித்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை மறுத்த துரைசாமி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கண்ணியமானவர் என்றும் கீழ்தரமான கருத்துக்களை முன் வைக்க மாட்டார் என்றும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *