‘நான் ரெடி, நீங்க ரெடியா?’… திருமாவுக்கு சவால் விட்ட அண்ணாமலை!

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரது சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்நிலையில் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை திருமாவளவனுக்கு சவால் விடுத்துள்ளார்.

அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய சித்தாந்த வாரிசாக பாரதிய ஜனதா கட்சி இன்று வாழ்ந்து காட்டி கொண்டிருக்கிறது.

எத்தனை காலம் மக்களை உங்களுடைய பொய் புரட்டுகளை வைத்து ஏமாற்றிக் கொண்டிருப்பீர்கள்?

எங்களுடைய தொண்டர்களை உங்கள் கட்சியினர் தாக்கியது எனக்கு மிகுந்த மன வேதனை அளித்தாலும் கூட, உங்களுடைய தொண்டர்கள் தவறான வழிகாட்டுதலின் பால் அதை செய்கின்றார்கள் என்றும் எனக்கு தெரியும்

எங்கள் தொண்டர்கள் கண்ணிலே எனக்கு பயம் தெரியவில்லை; நல்ல சமுதாயத்தை படைப்பதற்கான முயற்சி தெரிந்தது.

நீங்கள் சொல்லுகின்ற நேரத்திலே, சொல்லுகின்ற இடத்திலே தமிழ்நாடு பாஜக சார்பாக, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வாழ்க்கை சித்தாந்தம் எப்படி பாரதிய ஜனதா கட்சியின் இன்றியமையாத சித்தாந்தமாக மாறி இருக்கிறது? எப்படி நம்முடைய பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் அவருடைய வாழ்க்கையை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் வகுத்து கொடுத்த பாதையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று எடுத்துரைக்க நான் தயாராக வருகின்றேன் இடத்தையும் நேரத்தையும் நீங்கள் கூறுங்கள் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….