நள்ளிரவு 3 மணி ஆனாலும் அதிகாரிகள், முதலமைச்சரை தொடர்பு கொள்வதற்கான சுகந்திரத்தை முதலமைச்சர் வழங்கியுள்ளார்

எந்நிலையில் இருந்தாலும் தன்னிலை மறவாத தலைவராக முதலமைச்சராக இருக்கிறார்.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்து சட்டப்பேரவையில் பேச்சு

களிமேடு தேர் விபத்து தொடர்பாக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி பேச்சு…

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் கிடைத்ததும் அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தார்.

சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்துவிட்டு நிவாரணத்தை அறிவித்துவிட்டு சம்பவ இடத்திற்கு வருவதாக முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் மருத்துவமனைக்கு வந்தால் போதும் என்று தெரிவித்தேன். ஆனால் உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு முதலமைச்சர் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று ஆறுதல் தெரிவித்தால் தான் என்னை நானே தேற்றிக்கொள்ளமுடியும் என்று என்னிடம் கூறினார்.

100 ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வரும் தேர் விழாவில், தேர் விபத்து நடந்த ஊரில் ஊராட்சி மன்ற தலைவர் அதிமுகவை சேர்ந்தவர், ஒன்றிய கவுன்சிலர் பாஜகவை சேர்ந்தவர் என்றாலும் இந்த நிகழ்வில் அரசியல் பார்க்காமல் இணைந்து செயல்படவேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது விவசாயிகள் உயிரிழந்த ஓவ்வொருவரது வீட்டிற்கும் சென்று ஆறுதல் கூறினார். தற்போது முதலமைச்சராக இருந்த நிலையிலும் தன் நிலை மறவாமல் இருந்து செயலாற்றி வருவதற்கு நன்றி தெரிவித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *