விக்னேஷ் மர்ம மரணம்… அதிமுக வெளிநடப்பு!

ADMK

சென்னை தலைமைச் செயலக காலனி விக்னேஷ் லாக்கப் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் இன்று நேரம் இல்லா நேரத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஈரோடு மற்றும்திருப்பூர் மாவட்டங்களில் நகைக்காக வீட்டில் தனியாக உள்ள முதியவர்கள் கொல்லப்படுகிறார்கள் இதற்கு காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதேபோல் சென்னை தலைமைச் செயலக காவல் நிலையத்தில் லாக்கப் மரணம் அடைந்த விக்னேஷின் வழக்கு தொடர்பாக அதிமுக
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தது.

இந்த தீர்மானத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி விக்னேஷின் உடற்கூறு ஆய்வு அறிக்கை வந்திருக்கிறது விக்னேஷின் உடலில் 13 இடங்களில் காயம் இருந்து இருக்கிறது எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின்

விக்னேஷின் உடற்கூறு ஆய்வு அறிக்கையின்படி விக்னேஷின் லாக்கப் மரணம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டுள்ளது ஏற்கனவே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு உரிய முறையில் விசாரிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்

.

அதனைத் தொடர்ந்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வித்தியாவின் மரணம் தொடர்பாக இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் அப்போதுதான் நியாயமான முறையில் விசாரணை நடைபெறும் என தெரிவித்தார் இதற்கு அனுமதி அளிக்காததால் அதிமுக வெளிநடப்பு செய்ததாக தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *