ஒரே ஒருவருக்காக… தமிழக அமைச்சர்கள் திடீர் இத்தாலி பயணம்… பரபரப்பு காரணம்!

வரலாற்றிலேயே முதன் முறையாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் புனிதர் பட்டம் பெறுவதால் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக அமைச்சர்கள் இத்தாலி புறப்பட்டுச் சென்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அமைச்சர்கள் இத்தாலி பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இத்தாலி நாட்டின் ரோம் நகரில் வரும் 15ஆம் தேதி மறைசாட்சி தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. போப் ஆண்டவர் புனிதர் பட்டத்தை இவருக்கு அறிவிக்கிறார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் புனித பட்டம் பெறுவது வரலாற்றிலேயே முதல்முறையாகும்.

இதனால் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான்,சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் சென்னையிலிருந்து இத்தாலி புறப்பட்டனர்.

அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில்,தமிழகத்தின் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த புனித தேவசகாயம் பிள்ளைக்கு இத்தாலி நாட்டில் புனிதர் பட்டம் வழங்க உள்ளது தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பட்டம் வழங்கப்படுவதால் தமிழக அரசின் பிரதிநிதியாக அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், மனோ தங்கராஜ்,சிறுபான்மை ஆணைய தலைவராக நானும் செல்கிறோம்.இதன் மூலமாக தமிழக கிறிஸ்தவ மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமை சேர்த்துள்ளார். தமிழக மக்களின் நல்லெண்ணத்தை எடுத்துச் சென்று அங்கு இருக்கின்ற கத்தோலிக்க மார்க்கத்தின் தலைவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிக்க பிரதிநிதியாக செல்கிறோம்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறுகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியின் முதல் துவக்கத்தின் நிலைபாடில்தான் அனைவருக்கும் அனைத்து சமத்துவத்தையும் உருவாக்குகின்ற நிலையில் கத்தோலிக்க மார்க தலைவர்களை சந்தித்து தமிழக முதல்வர் மற்றும் தமிழக மக்கள் சார்பாக வாழ்த்துக்களை தெரிவிக்க உள்ளோம்.இந்த பயணத்தை புனித பயணமாக தற்போது மேற்கொண்டு உள்ளோம். அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து பதினான்காம் நூற்றாண்டில் வாழ்ந்து மிக சிறந்த சமூகத்திற்காக பாடுபட்டு உயிர்நீத்த தேவசகாயம் பிள்ளைக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட உள்ளது.

இது குமரிமாவட்ட மக்களிடமும் கிறிஸ்துவ மக்களின் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் படி நாங்கள் குழுவாக செல்கிறோம் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் சார்பாக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இது ஒரு சிறப்பான நிகழ்வு அங்கு செல்வதை ஒரு பெரிய அரிய வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிறந்து சமூக சீர்திருத்தத் இதற்காகப் பாடுபட்டு உயிர் நீத்தவருக்கு புனிதர் பட்டம் வழங்குவதில் மகிழ்ச்சி இவ்வாறு கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…