முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் வைகோ, திருமா, சுப.வீ, வேல்முருகன் திடீர் சந்திப்பு… ஒரே குரலில் ஒலித்த ஒற்றை கோரிக்கை!

இலங்கைக்கு மக்களுக்கு அனுப்பக்கூடிய நிவாரண பொருட்கள் தமிழர்களுக்கும் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் நிவாரண பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க நாடாளுமன்ற குழு அனுப்பவும் ஏற்பாடு செய்யவும் வலியுறுத்தி முதலமைச்சரை வைகோ, திருமாவளவன், வேல்முருகன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் நேரில் சந்தித்துள்ளனர்.

இலங்கை மக்களுக்கு வழங்கக்கூடிய நிவாரண பொருட்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவை அங்கு அனுப்ப மத்திய அரசிடம் பேசி ஏற்பாடு செய்யப்படும் என முதலமைச்சர் உறுதி அளித்ததாக மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்

தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சரை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் திராவிடர் இயக்க பேரவைத் தலைவர் சுப வீரபாண்டியன் உள்ளிட்டோர் சந்தித்து பேசினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியதாவது:

60 ஆண்டுகளாக இலங்கையில் வசிக்கக்கூடிய ஈழ தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தார் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள பொருளாதார பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ள நிலையில் உள்ள தமிழர்களின் துயரை துடைக்க கூடிய வகையிலும், இலங்கையில் உள்ள மக்களின் துயரை துடைக்கக் கூடிய வகையிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு 177 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்கும் நிலையில் இத்தகைய பொருட்களை அங்கு விநியோகம் செய்வதை கண்காணிக்க தமிழக அதிகாரிகள் செல்ல இருப்பதாக தெரிவித்தார்

இலங்கை தமிழர்களின் துயரை துடைக்க தமிழக முதலமைச்சர் ஆவன செய்வார் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தற்போதுதான் பெருமூச்சு விடுவதாகவும் தெரிவித்தார் மேலும் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஓன்றிய அரசின் அனுமதி பெற்று இலங்கையில் நிவாரண பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க ஏற்பாடு செய்வதாகவும் முதலமைச்சர் தெரிவித்ததாகக் கூறினார்

மேலும் இதன் தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக இலங்கை தமிழர்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக்கூடிய வகையில் ஒன்றிய அரசின் மூலம் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் கூறியதாகவும் தெரிவித்தார்

மேலும் தொடர்ந்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்: மனிதநேய அடிப்படையில் தமிழக அரசு வழங்க கூடிய நிவாரண உதவிகள் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு சென்றடையக் கூடிய வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…