ஜனநாயகத்தின் அச்சுறுத்தலை விரைவில் நாங்கள் முறியடிப்போம் – காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி

இந்தியாவின் அடுத்த நாடாளுமன்ற தேர்தலை  குறிவைத்து அனைத்து தேசிய கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வர தொடங்கியுள்ளது. அந்த வகையில்  ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அடுத்த நாடாளுமன்ற தேர்தலை மையப்படுத்தி மூன்று நாட்கள் காங்கிரஸ் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தொடக்க உரை ஆற்றிய சோனியா காந்தி நாட்டில் ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என  சோனியா காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர் தேசத் தலைவர்களை கொலை செய்தவர்கள் இன்று கொண்டாடப்படுகிறார்கள். ஜனநாயகத்திற்கு குரல் கொடுப்போர் மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் அச்சுறுத்தப்படுகின்றனர். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக காந்தி குடும்பத்தின் தலைமையில் காங்கிரஸ் கட்சி இயங்கும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

புதிய உறுதியுடன் வெற்றிக்கான பாதையை கண்டறிவதே சிந்தனை அமர்வின் முக்கிய அம்சமாகும். இந்தக் கூட்டத்தில் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர்கள் என பலரும் பங்கேற்றுள்ளனர். தொடக்க உரையை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியும்  நன்றியுரை முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசி முடித்து வைத்தனர். இந்த கட்சி கூட்டம் விரைவில் பெரிய மாநாடாக மாற வாய்ப்புள்ளது என அக்கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…