அம்மா மினி கிளிக்குகளில் பணியாற்றியவர்களுக்கு ஒரு நற்செய்தி… அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!

புதிதாக அமைய உள்ள நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் அம்மா மணி கிளினிக்குகளில் பணியாற்றியவர்கள், பேரிடர் காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி வழங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளிலும் புதிய நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி மற்றும் பொது சுகாதாரத் துறை இணைந்து நடத்திய ஆலோசனைக் கூட்டம் ரிப்பன் கட்டிட வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் பிரியா,துணை மேயர் மகேஷ் குமார்,மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் :-

சென்னையில் மக்கள் தொகை நெருக்கம் அதிகமுள்ள பகுதிகளான மார்க்கெட், குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் மற்றும் பேருந்து நிலையம் அருகில் என நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் தலா 35.45 லட்சம் மதிப்பில் மிக விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.

சென்னையில் 140 இடங்கள் தற்போது வரை தேர்வு செய்யப்பட்டு முடிக்கப்பட்டு உள்ளது என்றும் பிற இடங்கள் விரைவில் தேர்வு செய்யப்படும்.மேலும் சென்னை மாநகராட்சியில் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த 588 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

அம்மா மினி கிளினிக் என்பதை ஒராண்டுக்கு மட்டுமே ஏற்படுத்தினர் ,ஒரே மருத்துவருடன் அது செயல்பட்டது என்றும் அம்மா மினி கிளினிக்கில் வெறும் தோற்றம் மட்டுமே இருந்தது , அது பெயருக்கு ஏற்படுத்தப்பட்டது , இது ஊருக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

விரைவில் அமைய இருக்கின்ற இந்த நகர்ப்புற மருத்துவ நிலையங்களில் அம்மா மணி கிளினிக்குகளில் பணியாற்றியவர்கள், பேரிடர் காலங்களில் பணியாற்றியவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணிகள் வழங்கப்பட உள்ளன என்றார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் மா சுப்பிரமணியன், காய்ச்சல் சளி போன்ற சாதாரண நோய்களுக்கு பெரிய மருத்துவமனைகளில் மக்கள் இனி காத்திருக்க தேவையில்லை. மாநகராட்சியின் சார்பில் தற்போது 169 மருத்துவமனைகள் நிர்வகிக்கப்பட்டு வருகிறது என்றும் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் மருத்துவத்தின் தலைநகராக சென்னை இருந்துகொண்டு இருக்கிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…