பெரியார் பள்ளி: மாணவர் கலைஞர் – கோவி லெனின்

அந்தக் காரிலும் பின்சீட்டில்தான் உட்கார்ந்திருக்கிறார் கலைஞர். அவருக்கு அடுத்ததா நாவலர் நெடுஞ்செழியன். முன்னே டிரைவருக்குப் பக்கத்தில் பேரறிஞர் அண்ணா. கடைசி ஓவரின் 6 பந்துகளிலும் சிக்ஸர் அடித்து, மேட்ச் வின் பண்ணிட்டு வந்தது போல எல்லாருடைய முகத்திலும் மகிழ்ச்சி, பொங்கல் கொண்டாடுது.

இந்தியாவே நாங்கதான்னு தெனாவெட்டா இருந்த காங்கிரசை தமிழ்நாட்டில் தி.மு.க. தெறிக்க விட்டிருந்தது. (ஆமா..ஆமா.. 18 ஸ்டேட்டுல ஆட்சி பண்ணுறோம்னு சொல்ற அண்ணாமலை வகையறாக்கள் அலறுற அளவுக்கு நேரு ஸ்டேடியத்தில் மோடி முன்னிலையில் வச்சி செஞ்சாரே முதல்வர் மு.க.ஸ்டாலின்! அந்த மாதிரி கெத்துதான் அப்பவும்…இப்பவும்)

பெரிய மூளைக்காரர்னு பெத்தபேரு எடுத்திருந்தவரு ராஜாஜி. அந்த தேர்தலில் தி.மு.க கூட்டணியில் இருந்தாரு. ஒரு கையில் பூணூலைப் பிடிச்சிட்டே இன்னொரு கையால உதயசூரியனுக்கு ஓட்டுப் போடுங்கன்னு தன்னோட சுதந்திரா கட்சிக்காரங்களுக்கு அட்வைஸ் வேற! கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அந்தக் கூட்டணிக்கு கூடுதல் வலு சேர்த்திருந்தாரு. அதோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிரஜா சோஷலிஸ்ட் கட்சிகளும் கூட்டணியில் இருந்தன. திராவிடத்தை உண்டு இல்லைன்னு பார்த்திடுறேன்னு அதுவரை முண்டா தட்டிக்கிட்டிருந்த ம.பொ.சி.யும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில்தான் இருந்தாரு. நாம் தமிழர் (old version) சி.பா.ஆதித்தனாரும் அதே கூட்டணிதான்.

திராவிடமே கொள்கை; பகுத்தறிவே உயிர்" நாவலர் நெடுஞ்செழியன் நூற்றாண்டு தினச்  சிறப்புக் கட்டுரை!

தி.மு.க. கூட்டணி பலமா இருக்கிறதைப் பார்த்துட்டு, ‘ஒத்தைக்கு ஒத்தை நிக்க முடியுமா’னு இப்ப கூவுற மாதிரியே அப்பவும் ஒரு சிலதுகள் கூவிப் பார்த்தது. Inidvidualஆ எடுக்கிற ரன்னைவிட, Teamன் Total Score அதிகமா இருந்தாதான் ஜெயிக்க முடியும். அதுதான் ஆட்டம். ‘கப்பு முக்கியம் பிகிலு’ என்ற கணக்கில் தெளிவாக இருந்தார்கள் அண்ணாவும் கலைஞரும்.

கூட்டணிப் பேச்சு வார்த்தையில் கலைஞரோட ரோல் முக்கியமானது. தி.மு.க.வின் கேப்டன்ஷிப்பை விட்டுக்கொடுக்காமல், கூட்டணிக் கட்சிகளுக்கான ஷேரையும் கரெக்ட்டா மெயின்டெய்ன் பண்ண கலைஞர் கருணாநிதிக்கு கச்சிதமாத் தெரியும். (அப்படியேதான், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினும்)

“தேர்தலை சமாளிக்க காங்கிரஸ்கிட்ட கஜானாவே இருக்கு. நம்மகிட்ட என்ன இருக்கு” என்பது அண்ணாவின் கவலை. ஏற்கனவே, அவரோட தொகுதியில்தான் காங்கிரஸ் கட்சி, 5 ரூபாய்-10 ரூபாய்னு ஓட்டுக்கு ரேட் ஃபிக்ஸ் பண்ணி, திருமங்கலம் ஃபார்முலாவுக்கெல்லாம் தாத்தாவான காஞ்சிரபுரம் ஃபார்முலாவை உருவாக்கி, ஓட்டுக்குப் பணமும், வெங்கடாசலபதி படத்தின் மீது வாக்காளர்களிடமும் சத்தியமும் வாங்கி அண்ணாவைத் தோற்கடித்திருந்தது. அந்தத் தழும்பு அண்ணாவுக்கு அப்படியே இருந்தது. கலைஞரோ, தஞ்சாவூரு பலே பணக்காரர் பரிசுத்த நாடாருக்கு முன்னாடி சிலம்பம் ஆடி, திருவிழாக் கணக்கா ஊரையே கலக்கி, வாணவேடிக்கையை வெற்றிகரமா நடத்தி முடிச்சவரு. அந்த தெம்போடுதான் இந்த தேர்தல் களத்திலும் இருந்தாரு.

அண்ணா மறைவிற்கு கருணாநிதி எழுதிய இரங்கற்பா கவிதை – பாமரன் கருத்து

“கவலைப்பட வேணாம்ண்ணே.. காங்கிரசை ஜெயிக்கலாம்” என்றார் கலைஞர்.

”ஜெயிக்கணும்னா போஸ்டர், பொதுக்கூட்ட செலவுக்கே 10 லட்சமாவது வேணும்” என்று பெருமூச்சு விட்டார் அண்ணா.

“10 லட்சம்தானே..” என்றார் கலைஞர்.

‘எங்கிட்டேயே உன் தெனாவெட்டா?’ என்பது போல இருந்தது அண்ணாவின் பார்வை. கலைஞர் உறுதியளித்தார்.

தி.மு.க வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும்போது, சைதாப்பேட்டை தொகுதி வேட்பாளர், ‘மிஸ்டர் 11 லட்சம்’ என்றார் அண்ணா.

கூட்டம் ஆர்ப்பரித்தது. 10 லட்சத்தைத் தாண்டி 11 லட்சமாக தேர்தல் நிதி வசூலித்து தந்த கலைஞரைத்தான் அண்ணா அப்படி சொன்னார். அப்புறமென்ன, தேர்தல் களம், அதகளம்தான்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வர் உள்பட பெரிய விக்கெட்டுகளெல்லாம் அவுட். ஒரேயொரு மந்திரி மட்டும் தன்னந்தனியா ஜெயிச்சிட்டு, என்ன பண்ணுறதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டிருந்தாரு. இத்தனைக்கும் காங்கிரஸ் கட்சிக்காக வரிந்து கட்டி பிரச்சாரம் செய்திருந்தது யாரு தெரியுமா?

நம்ம கிழவரு பெரியார்தான்.

பெரியாரும் சோஷலிசப் பயணமும்! | பெரியாரும் சோஷலிசப் பயணமும்! - hindutamil.in

காரின் பின்சீட்டில் உட்கார்ந்திருந்த கலைஞருக்கு அண்ணாவின் மனசு என்னன்னு தெரியும். கூட்டணி போட்டிருந்த தலைவர்களெல்லாம் அண்ணாவுக்காக காத்திருந்தாலும், அண்ணா பார்க்கப் போவது, மூணு தேர்தலா தி.மு.க.வை முழு மூச்சா எதிர்த்து பிரச்சாரம் செய்த பெரியாரைத்தான்.

சென்னையிலிருந்து திருச்சிக்கு கார் போகுது. திருச்சியில் இருக்கிற பெரியார் மாளிகை முன்னாடி நிக்குது. கார் வருவதற்கு முன்னாடியே, நம்ம அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியோட தாத்தா அன்பில் தர்மலிங்கம் அங்கே வெயிட் பண்ணிக்கிட்டிருக்காரு.

பெரியார் கட்சிக்கும் அண்ணா கட்சிக்கும் அப்பனுக்கும் மகனுக்குமான வெட்டுக்குத்து ரேஞ்சுக்கு 18 வருசமா, அப்படி ஒரு பகை புகைஞ்சிட்டிருந்தது. இப்ப தண்ணி ஊத்தப் போறாங்களா, பெட்ரோல் ஊத்தப் போறாங்களான்னு இரண்டு தரப்பும் பக்..பக்னு இருக்கு.

க்ளாஸ் ரூமில் ஸ்டூடன்ஸை வாத்தியார் திட்டும்போது, First benchல் இருப்பவர்கள் அமைதியாக இருப்பார்கள். அண்ணா அப்படித்தான்.

Last bench பக்கமிருந்து சலசலப்பு சத்தம் கேட்கும். கலைஞர் அந்த ரகம்.

க்ளாஸ் முடிந்ததும் வாத்தியாரை தனியா சந்திச்சி, “ஸாரி சார்..”னு ஸ்டூடன்ஸையும் விட்டுக்கொடுக்காமல் வாத்தியாரையும் கூல் பண்ணுற டைப்தான் அன்பிலார்.

“க்ளாஸ்ல என்னை எதிர்த்துக்கிட்டு, நாங்களே படிச்சிக்கிறோம்னு கிளம்பிப் போன பசங்க, திடுதிப்புனு வீட்டுக்கு வந்திருக்காங்களே”னு பெரியாருக்கு ஆச்சரியம். “உருப்பட மாட்டீங்கடான்னு திட்டியிருக்கேன். ஆனா, நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டு வந்து நிக்கிறானுங்க”ளேன்னு பெரியாருக்கு கூச்சமாக இருந்தது.

விதைத்தவர் பெரியார்; வளர்த்தவர் அண்ணா; மரம் ஆக்கியவர் கலைஞர்! - Dr  Kalaignar Karunanidhi

என்ன திட்டுனாலும் வாத்தியார் வாத்தியார்தானே! பாஸ் மார்க் வாங்கியதே அவர் கற்றுத்தந்த ஆரம்பப் பாடத்தால்தானே! அதனால், First Bench ஸ்டூடன்ட்டான அண்ணா, “எங்க ஆட்சியே உங்களுக்குத்தான்யா காணிக்கை”னு குருதட்சணை கொடுத்தாரு. எப்போதும் போல நாவலரு பக்கத்திலே அமைதியா நின்னாரு.

நம்ம Last Bench ஸ்டூடன்ட் கலைஞரோ, பெரியாரைப் பார்த்துக்கிட்டிருந்தாரு. பெரியாரும் கலைஞரை திரும்பிப் பார்த்தாரு.

‘தல’க்கு நல்லாத் தெரியும். இந்த Last Benchதான், திராவிட ஆட்சித் திறனுக்கான Bench Markன்னு.. …

(அலப்பரை தொடரும்)….

(ஊடகவியலாளர் கோவி. லெனின் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட பதிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *