அமலாக்கத்துறை அனுப்பிய சம்மன்..!! ஆஜராகும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நபர்..!!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் காங்கிரஸ் கட்சி பல இன்னல்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் தற்போது  ஜவஹர்லால் நேரு தலைமையில்  ஆரம்பிக்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோசியேடட் ஜர்னல்ஸ் லிமிடெட் என்ற நிறுவனம் நடத்தி வந்தது.

இந்த நிலையில் இந்த பத்திரிகை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சூழலில் இந்த நிறுவனத்தின் சொத்துக்களை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் அபகரித்துக் கொண்டனர் என புகார் எழுந்தது. கோடிக்கணக்கான சொத்துக்களை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் சட்டவிரோதமாக அபகரித்துக்கொண்டதாக பாஜக தலைவர் சுப்பிரமணிய சாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரிகள் ஊடகங்களுக்கு பேட்டியளிக்கக் கூடாது! : அதிரடி  உத்தரவு

இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரித்து வரும் நிலையில்  இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறையினர் சம்மன் வழங்கியுள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக நாளை (வியாழன்) ராகுல் காந்தியும், ஜூன் 8-ல் சோனியா காந்தியும் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.இது குறித்து பேசிய அபிஷேக் சிங்வி ஏழு வருடம் கழித்து பழைய வழக்கில் அமலாக்கத்துறை இப்போது விசாரணை நடத்துவது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார். மேலும்  எந்தவிதமான சட்டவிரோத பணப் பரிவர்த்தனையை நேஷனல் ஹெரால்டு விவகாரத்தில் நடக்கவில்லை என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *