ஆதங்கப்பட்ட அன்புமணி… ஆராய உத்தரவிட்ட அன்பில் மகேஷ்!

Anbil

அரசு பள்ளிகளில் 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து காரணத்தை கண்டுபிடிப்போம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தகரி சிலம்பாட்டக் கழகம் நடத்தும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான 2022 ஆண்டிற்கான மாநில சிலம்புப் போட்டி
சென்னை ராயப்பேட்டையில் உள்ள புதுக் கல்லூரி வளாகத்தில் தகரி சிலம்பாட்டம் கழகம் சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான சிலம்ப போட்டி நடைபெற்றது.

இப்போட்டியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்:- விளையாட்டு துறையில் சிலம்பம் போட்டிக்கு 3% இடஒதுக்கீட்டை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.

பாரம்பரிய விளையாட்டான சிலம்பத்தை ஊக்கப்படுத்துவதற்கான முயற்சியை முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார். சிலம்பத்தின் வரலாற்றை அறிய தனி குழு அமைத்துள்ளார்.

4 இடங்களில் ஒலிம்பிக் கமிட்டி, சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம், செஸ் ஒலிம்பியாட் போட்டி என பல திட்டங்களை முதலமைச்சர் கொண்டு வந்துள்ளார். அரசு பள்ளிகளில் 5 வயது கடந்த மாணவர்களின் சேர்க்கை வழக்கம் போல் நடைபெற்று வருகிறது.மாணவர் சேர்க்கை குறித்து ஆலோசனை மேற்கொண்டோம் விரைவில் சுற்றறிக்கை வெளியாகும்.

மாணவர்கள் முக கவசம் அணிவது குறித்து முதலமைச்சர் அலுவலகத்தில் வரும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவோம். 6.70 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு வருகை தராத காரணம் குறித்து ஆராய்ந்து காரணத்தை கண்டுபிடிப்போம். மாணவர்கள் சிறப்பு தேர்வுகள் எழுதவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *