பறக்கும் டைனோசரின் முட்டை கண்டுபிடிப்பு

பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர், காங், டிராகன் போன்ற உயிரினங்கள் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உலகில் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இந்த உயிரினங்களை  மையமாகக் கொண்டு திரைப்படங்கள் வெளியாகி தொடங்கி , மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

       இந்நிலையில் சீனாவில் இரண்டு புதிய டைனோசர் இனங்களில் புதை படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. டெரோசாரஸ் எனப்படும் பறவை இன டைனோசர் முட்டைகள் மற்றும் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வகையான டைனோசர்கள் 65 அடி நீளம் வரை இருந்திருக்கலாம் என்பதை தெரிவிக்க படும்படியான மாதிரிகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

      இது 180 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்திய புதைபடிமம், மே மாத இறுதியில் தெற்கு சீனாவின் யுன்னான் மாகாணத்தில் உள்ள லுஃபெங் நகரில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த புதுமையான கண்டுபிடிப்பைத் தொடர்ந்து, டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் ஊழியர்கள் மீதமுள்ள எலும்புகளுக்குச் சேதம் ஏற்படாமல் தடுக்க அவசர அகழ்வாராய்ச்சிகளை மேற்கொள்ளத் தொடங்கினர். அதன்படி அடுத்தடுத்த ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.இந்த பகுதி மண் அரிப்புக்கு ஆளாகும் என்பதால் இது விரைவாகச் செய்யப்பட்டது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. லுஃபெங் நகரத்தின் டைனோசர் புதை படிவ பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் வாங் தாவோ கூறுகையில், ”கிட்டத்தட்ட முழுமையான ‘லுஃபெங்கோசொரஸ்’ (Lufengosaurus) என்ற டைனோசரின் முழுமையான எலும்புகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது மிகவும் அரிதானது என்றும், இந்த கண்டுபிடிப்பு ஒரு ‘தேசிய புதையல்’ என்றும் அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *