இதுக்கு மேல பூமில உயிர் வாழ முடியாது போலயே

கடந்த சில வருடங்களாகவே பூமியின் காலநிலை முற்றிலும் கணிக்கமுடியாத வகையில்  மாறியுள்ளது. பூமி இப்படி ஆகியதற்கு காரணம் ‘புவி வெப்பமடைதல்’ தான் என்று நமக்கு தெரிந்தாலும், அதனை தடுக்க நாம் எடுத்த நடவடிக்கைகள் என்ன? தனி மனிதன் சுயநலத்திற்காக காடுகளை அழிப்பது, தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் புகையை சுத்திகரிப்பு செய்யாமல் அப்படியே வெளியேற்றுவது போன்ற செயல்கள் சுற்றுசூழலை மேலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பூமியில் உட்கருவம் கணிப்புகளை விட வேகமாக குளிர்ந்து வருவதாக ஆயில் தெரிவித்துள்ளது! பூமியின் வெளிப்புற கருவம் வேகமாக குளிர்ந்து, திடப்பொருளாக மாறிவிட்டால், செவ்வாய் கோள் போல, பூமியும் உயிர்கள் அற்ற கோளாகிவிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இம்மையமானது(Earth Core) நம் பூமியின் இதயமாகும். ஒரு மனிதர்க்கு எப்படி இதயம் என்பது மிக முக்கியமோ, அதே போல பூமியின் உட்கருவம் பூமியில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் மிக முக்கியம்.அதுவே  பாதிக்கப்பட்டால், பூமியில் வாழும் அனைத்து உயிர்களும் நேரடியாக பாதிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published.