கவுன்ட்டவுன் ஸ்டார்ட்ஸ் – பிஎஸ்எல்வி சி-52 விண்ணில் செலுத்துவதற்காக கவுன்ட்டவுன் தொடங்கியுள்ளது

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய தலைவராக எஸ்.சோமநாத் நியமிக்கப்பட்டதை அடுத்து அவர் தலைமையில் விண்ணில் செலுத்தப்படும் முதல் ராக்கெட் பிஎஸ்எல்வி சி-52. இந்த ஆண்டு விண்ணில் செலுத்தப்படும் முதல் ராக்கெட்டாகவும் இது அமைந்துள்ளது.

பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட் மூலம் EOS-04 ரிசாட் 1ஏ என்ற அதிநவீன செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட உள்ளது. வானிலை மாற்றங்களின் போது துல்லியமான புகைப்படங்களை அனுப்பவும், விவசாயம், வனம் மற்றும் மரம் வளர்ப்பு, மண்ணின் தன்மை, மழை வெள்ள பாதிப்புகளை துல்லியமாக படம் பிடிக்கவும் இந்த செயற்கைகோள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EOS – 04 செயற்கைகோளுடன் இஸ்ரோ மற்றும் அமெரிக்காவின் கொலராடோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் ஆய்வு மாணவர்கள் வடிவமைத்த சிறிய ரக இன்ஸ்பயர் சாட் -1 செயற்கைகோளும் விண்ணில் ஏவப்படுகிறது. மேலும், இந்தியா, பூட்டான் நாடுகள் ஒருங்கிணைந்து வடிவமைத்துள்ள ஐ.என்.எஸ் – 2TD என்ற சிறிய ரக செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

மொத்தம் ஆயிரத்து 710 கிலோ எடை கொண்ட பிஎஸ்எல்வி – சி52 ராக்கெட், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான 25 மணி நேர 30 நிமிடத்திற்கான கவுண்டவுன் அதிகாலை 4.29 மணிக்கு தொடங்கியது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….