பூமியிலிருந்து 681 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இணைந்த 3 விண்மீன் திரள்கள்!

பேரண்டம் மிகவும் விந்தையானது. இதை பல்வேறு காலகட்டத்தில் பலரும் சொல்லியதுண்டு, சொல்லியும் வருகிறார்கள்.

இந்நிலையில் பூமியிலிருந்து சுமார் 681 மில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் மூன்று விண்மீன் திரள்கள் (Galaxy) இணையும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான ‘நாசா’-வின் ஹப்பிள் விண்வெளி தொலைக்கி அனுப்பியுள்ளது. இதனை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு முகமை உறுதி செய்துள்ளது.

 ஈர்ப்பின் காரணமாக விண்வெளி திரள்களின் மூன்றும் இணைந்த போது அது நட்சத்திரம் போலவும், வெள்ளை நிற நுரையை தள்ளும் கடல் அலை போலவும் காட்சி அளித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை காஸ்மிக் ஆப்ஜெக்ட் ஐசி 2431 என்று அழைக்கப்படுவதாக ஹப்பிள் தெரிவித்துள்ளது. கடந்த 1990-இல் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி வட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த தொலைநோக்கி அதன் பணியை செய்து வருகிறது. விண்வெளி தொலைநோக்கி அறிவியல் நிறுவனத்தின் கட்டளைக்கு ஏற்ப இது தனது பணியை செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….