இப்போ வா பாப்போம் –  கொசுவை விரட்ட இயற்கை முறை

ரத்தம் உறிஞ்சி, நோயைக் கொடுக்கும் கொசுக்களை ஒழிக்க, சிறந்த வழி எது தெரியுமா? அவற்றை முட்டையிலேயே அழிப்பது தான். அதற்கு தற்போது, நச்சுமிக்க பூச்சிக்கொல்லிகளே பயன்படுகின்றன. இயற்கையாக, மலிவாக, நீடித்த பலன்தரக்கூடிய, எளிய மருந்து ஒன்றை உருவாக்க முடியாதா?

முடியும் என கவுஹாத்தி பல்கலைக்கழக விஞ்ஞானிகள் சொல்கின்றனர். செயற்கையான பூச்சிக் கொல்லிகளுக்கு கொசுக்கள் எதிர்ப்பு சக்தியை விரைவில் உண்டாக்கிக்கொள்கின்றன. இந்த இடத்தில் தான் கிராம்பு எண்ணெய் மிகவும் உதவிகரமாக இருப்பதை கவுஹாத்தி விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

கிராம்பு எண்ணெய் கலந்த தண்ணீரில், கொசு முட்டையிட்டால், அது அவற்றை கொன்றுவிடுகிறது. இதற்கு, கிராம்பு எண்ணெயில் உள்ள யூஜினால் என்ற வேதிப்பொருள்தான் காரணம். இத்துடன், கவுஹாத்தி விஞ்ஞானிகள், பிப்பெரோனைல் பியூடாக்சைடு (பி.பி.ஓ.,) என்ற பொருளையும் கலந்தபோது, பெரும்பாலான கொசு முட்டையிலிருந்து வந்த புழுக்கள் கொல்லப்பட்டன. கொசுத் தொல்லை மிக்க வெப்பப்பிரதேசங்களில் எளிதாக கிடைக்கும்

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…