தேர்தலும் …. வாக்குறுதிகளும் ….

அதிகாரம் மனிதர்களின் உச்சகட்ட போதை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவன் தனக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என்கிற ஆசை தான் மனிதனின் அதிகார பசிக்கு அடித்தளம். ஆதி மனிதர்கள் பாதுகாப்புக்காக குழுவாக பிரிந்து வாழ தொடங்கினார்கள். பின்னர் நாகரிகம் வளர, வளர அக்குழுவிற்கு பிரதிநிதியாக தலைவர் ஒருவர் தேர்தெடுக்கப்பட்டார். இத்தலைவர் தான் அக்குழுவிற்கு தேவையான அனைத்தையும் முன்னின்று செய்து கொடுப்பார்.

இதுவே காலப்போக்கில் தலைவராக இருக்கும் நபருக்கு சாமானிய மக்கள் அடிபணிய தொடங்கினார்கள். இங்கு தான் அதிகாரம் என்ற ஒன்று தோன்றியது. பின்னர் ஒவ்வொரு கால கட்டத்திலும் தலைவர்களுக்கான மதிப்பு அதிகரித்து கொண்டே போனது. இதில் தான் தலைவர் என்ற சொல் மறைந்து அரசர், அரசி மன்னர், மன்னாதி மன்னர் நடைமுறைக்கு வந்தது. அப்போதிலிருந்து தான் சாமானிய மக்கள் கட்டாயம் அரசனுக்கு அடிபணிய வேண்டும் என்று பழக்கம் தொடங்கியது.

பின்னர் இதிலிருந்து மாறுபட்டு மனிதர்கள் யோசிக்க ஆரம்பித்து, எப்படி ஒரு குழுவிற்கு ஒரு தலைவர் மட்டுமே இருக்க முடியும். மேலும் எதன் அடிப்படையில் அவர் தலைவரானார் என்பன போன்ற கேள்விகள் எழுந்தது? இதனால் ஒரு தலைவர் போட்டிக்கு ஏராளமாக போட்டியிட்டனர். இங்கு தான் போர் என்ற ஒன்று ஆர்மபித்தது. சில மனிதர்களின் இந்த அதிகார பசிக்கு இறந்தவர்களின் என்னைகை கணக்கில் அடங்காதது.

பின்னர் காலங்கள் மாற, மாற அரசன் என்ற பெயர் அமைச்சர், அதிபர், பிரதமர் என்று மாறியது. இதுவே தற்கால அரசியல். ஆனால் இப்போது பதவிக்காக உயிர் சேதம் ஏற்படுவது கணிசமான அளவில் குறைந்துள்ளது. அதற்கு பதிலாக தற்போது மனிதர்களுக்கு ஆசை உருவாக்கி, அந்த ஆசையை நிறைவேற்றி  ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள்.  இதற்காக தேர்தல் நடைபெறும்போதே மக்களுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இவையெல்லாம் செய்வோம் என்று வாக்குறுதிகள் அளிப்பார்கள். இந்த வாக்குறுதிகளே தற்போது மக்களிடையே யார் தலைவராக வர வேண்டும் என்று தீர்மானிக்கிறது. எந்த கட்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும் செய்கிறதோ அதுவே மக்கள் மனதில் இடம் பிடிக்கும். இதனை குறிப்பாக வைத்து கொண்டு அனைத்து கட்சிகளும் தேர்தலின் போது வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறது.

1950-களில் தான் இந்தியாவில் தேர்தல் நடைபெற தொடங்கியது. ஆனால் இந்த தேர்தலில் ஜமீந்தார்கள், பிராமணர்கள், அதிக சொத்து வைத்திருப்பவர்கள் ஆகியோர் தான் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்தனர். பின்னர் பெரியார், அம்பேத்கர், அண்ணா போன்றவர்களால் தான் அனைத்து மக்களும் தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலைக்கு வந்தது. இதில் குறிப்பிட தக்க செய்தி என்னவென்றால் அப்போதிருந்த அரசியல் சூழலில், அரசியல் தலைவர்கள் யாரும் மக்களுக்கு வாக்குறுதிகளை தரவில்லை.

ஏனென்றால் அப்போது இருந்த காலத்தில் மனிதர்களுக்கு முதலில் தேவைப்பட்டது உரிமைகளே உடைமைகள் இல்லை. இதனால் அரசியல் தலைவர்களின் பேச்சு மற்றும் எழுத்தே போதுமானதாக இருந்தது தேர்தலில் பங்குபெறுவதற்கும் , போட்டியிடுவதற்கும். ஆனால் தற்போது உள்ள அரசியல் சூழலில் வாக்குறுதிகளை தராமல் வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவே முடியாது. என்னயென்றால் அந்த அளவிற்கு மக்கள் வாக்குறுதிகளை எதிர் நோக்கி காத்திருக்கிறார்கள். உதாரணமாக கடந்த 2021-ம் ஆண்டு தமிழகத்தில் நடந்த சட்டமன்றத்தின் போது, திமுக மற்றும் அதிமுக அளித்த வாக்குறுதிகளை பார்ப்போம் .

அதிமுக :

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் விலையில்லா கேபிள் இணைப்பு வழங்கப்படும். பெண்களின் பணிச் சுமையை குறைக்கும் நோக்குடன் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு அம்மா வாஷிங் மெஷின் வழங்கப்படும் போன்ற வாக்குறுதிகள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

திமுக:

அனைத்து காவலர்களுக்கும் வாரம் ஒருநாள் விடுப்பு வழங்கப்படும். மீண்டும் சட்டமேலவை கொண்டு வரப்படும் புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் கொண்டுவரப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் திமுக அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. நீட் தேர்வு விலக்கு போன்ற வாக்குறுதிகளை அளித்தனர்.

இவ்விரண்டு கட்சிகளும்  கடந்த 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளிள் ஒரு சிலவே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை வைத்து தான் மக்கள்  யாருக்கு ஒட்டு போட வேண்டும்  தீர்மானித்தார்கள் என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் வாக்குறுதிகளை உற்று நோக்குகிறார்கள்.

 எனவே இனி வரும் தேர்தல்களில் மக்களின் பிரச்சனைகளை கேட்டறிந்து, அதற்கேற்றாற்போல் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அளிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தான் ஒரு கட்சி எளிதில் மக்கள் மனதில் நிற்க செய்ய முடியும். 

Leave a Reply

Your email address will not be published.