கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்

Thumb_Modi

“என்ன மொசக்குட்டி… ரொம்ப சந்தோசமா இருக்க போலத்தெரியுது…”

“சந்தோசமெல்லாம் இல்ல சித்தப்பு… நம்ம மக்களை இந்த ஒன்றிய அரசு எம்புட்டு முட்டாளா நினைச்சிருக்குதுன்னு பார்த்தால் கடுப்பு தான் வருது!”

“அதான் தெரிஞ்ச விஷயமாச்சே சித்தப்பு… இப்ப என்ன புது மேட்டரு?”

“எல்லாம் உக்ரைன் – ரஷ்யா போரை வச்சுத்தான்”

“எனக்கும் இதுல ரொம்பவே ஆச்சர்யமா இருக்கு சித்தப்பு… நம்ம உலகத்துலயே நம்பர் 1 சாணக்கியர்… ராஜதந்திரி… உலக நாடுகளோட பெரிய அளவுல லிங்க் வச்சிருக்குற மோடி வசிக்கிற இதே ஆசியா கண்டத்துல… இப்டி எப்படி போர் நடக்குதுன்னு ஆச்சர்யம் சித்தப்பு!”

“க்கும்… உன்னோட உலக அறிவுல தீய வைக்க! உலகத்துலயே ஆசியக் கண்டத்துல தான் போரே அடிக்கடி நடக்குது… ஏற்கனவே இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில போர் நடந்துட்டு இருக்கு… சீனாவுக்கும் மத்த நாடுகளுக்கும் முட்டல் மோதல் இருக்கு… வடகொரியா யாருக்கும் அடங்காம தண்ணி காட்டிட்டு இருக்கு… ரொம்ப நாளா புகைஞ்சுகிட்டிருந்த உக்ரைன் ரஷ்யா பிரச்சனை போரா மாறியிருக்கு!”

“மோடி உலகம் சுத்தும் வாலிபர் மாதிரி சுத்திவந்தும் இம்புட்டு பிரச்சனை நடந்துகிட்டிருக்குதா சித்தப்பு?”

“அவரு சுத்துறதெல்லாம் அதானி அம்பானிக்கு கான்ட்ராக்ட் புடிச்சுக் குடுக்குறதுலயே சரியாப் போயிடுதே! பிறகென்ன உலக விஷயங்களைக் கவனிக்க? இதுல ஒருத்தன் சொல்றான், கொரோனாவால மோடி கொஞ்ச நாளா வெளிநாட்டுக்கே போகாததால தான் ரஷ்யா உக்ரைன் போரே தீவிரமா நடக்குதாம்! கொரோனா இல்லாதவரைக்கும் இந்த போரே நடக்காம மோடி ரெண்டு பேரையும் அடக்கி வச்சிருந்தாராம்!”

“அட… இது புது உருட்டால்ல இருக்கு சித்தப்பு!”

“இதுக்கே அசந்தா எப்படிடா மொசக்குட்டி… நம்ம பசங்க, இந்தியாவுல மருத்துவம் படிக்க காசு செலவழிக்க முடியாம உலகம் முழுக்க எங்கெல்லாம் குறைந்த செலவுல மருத்துவம் படிக்க வாய்ப்பிருக்கோ அங்கல்லாம் போயிட்டிருக்காங்க… அதேபோல நீட் தேர்வால வாய்ப்பு கிடைக்காதங்களும் வெளிநாடுகளுக்குப் போறாங்க… இதையெல்லாம் இப்போ கர்நாடகத் தலைவர்களே பேசத் தொடங்கிட்டாங்க… உடனே, இதுக்கு முந்தைய ஆட்சியாளர்கள்தான் காரணம்னு ஒரே போட மோடி போட்டுட்டாரு!”

“முந்தைய ஆட்சியாளர்கள்னு சொன்னாரா? போன ஆட்சியும் இவரோட ஆட்சி தான சித்தப்பு?”

“ஆமாடா… அதேபோல வாஜ்பாயும் தான் ஆட்சியில இருந்தாரு… வழக்கமா நேரு தான் காரணம்னு அடிச்சுப் பேசுவாரு… இப்ப என்னவோ வாய் குளறி முந்திய ஆட்சியாளர்கள்னு சொல்லிட்டாரு போல!”

“அதுசரி, இந்திய கவர்மென்ட்டு நம்ம மாணவர்களை மீட்டுட்டு வர்றதுக்கு கங்கா ஆபரேஷன்னு எதோ ஆபரேஷன் நடத்துச்சாமே?”

“ஆமாடா… இந்த ஆபரேசன்ல வெறுமனே க்ளவுஸ் மாட்டிக்கிட்டு வேடிக்கை பார்த்தது மட்டும் தான் நம்ம கவர்மென்ட்டோட வேலை… ஆபரேஷன் பண்ணது மாணவர்கள் தான்! அதாவது, உக்ரைனுக்குள்ளருந்து தப்பிப் பிழைத்து எல்லைப் பகுதிகளுக்கு வந்ததெல்லாம் நம்ம மாணவர்கள் தான். அப்படி வந்த மாணவர்களை விமானத்தில் கூட்டிட்டு வந்தது மட்டும் தான் இந்தியாவோட வேலையே!”

“அடக்கொடுமையே சித்தப்பு!”

“அதுமட்டுமில்ல… நம்மூர்ல சென்னை வெள்ளத்தப்ப நிவாரணப் பொருள்களில் அதிமுக ஸ்டிக்கர் ஒட்டுச்சுல்ல… அதேபோல மோடி கவர்மென்ட் அதிகாரிங்க, மாணவர்களை அழைச்சுட்டு ஏர்போர்ட் போற பேருந்து முன்னால இந்தியக் கொடியைக் கட்டி போட்டோ எடுத்து, என்னவோ உக்ரைனுக்குள்ளருந்து வீரதீரமா மாணவர்களை மீட்டுட்டு வந்த மாதிரி ஷோ காட்டிக்கிட்டாங்க!”

“இதுவேறயா?!!”

“இதுல விமானத்துல மாணவர்களை அழைச்சுட்டு வர்றப்ப ஒரு அதிகாரி, ‘பாரத் மாதா ஹீ ஜே!” சொன்னதும் மாணவர்களும் உற்சாகமா சொல்லியிருக்காங்க… அப்டியே அவரு, மோடிக்கு நன்றி சொல்ற மாதிரி கோஷம் போடச் சொல்லவும் மாணவர்கள் சைலண்ட் ஆகிட்டாங்க! அந்த வீடியோ தான் வைரலா சுத்துது! கஷ்டப்பட்டு தப்பிச்சு வந்த மாணவர்களுக்குத்தான அதோட வலி தெரியும்! அதுமட்டுமில்லாம, இவங்கள யாரு வெளிநாட்டுக்குப் போகச் சொன்னதுன்னு வேற பாஜககாரங்க விமர்சனம் பண்ணிட்டுத் திரிஞ்சாங்களே!”

“அதுசரி… இம்புட்டு நடந்திருக்கு… தமிழ்நாடு பாஜக இந்த விசயத்துல எதுமே அரசியல் பண்ணலையா சித்தப்பு?”

“அது பண்ணாமலா மொசக்குட்டி! இங்கருக்குற ஒரு பாஜக லேடி… மோடி ரஷ்யாவுக்கு மிரட்டலா வேண்டுகோள் வச்சதும் 5 மணி நேரத்துக்கு போரை ரஷ்யா நிறுத்தி வச்சிருக்குன்னு பதிவு போட்டிருக்கு! அதையும் பல பேரு ஷேரிங் பண்ணிட்டு இருக்காய்ங்க!”

“சொல்றதுதான் சொல்றாங்க… 5 நாள் போர் நிறுத்தத்துக்கு ஒத்துக்கிடுச்சுன்னு பெருசா அடிச்சு விடலாம்ல! ஹஹஹஹ!”

புத்தன்.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….