காரல் மார்க்ஸின் தாக்கங்கள் 

“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பது தமிழரின் வாழ்வியல் பண்பாடாக இருந்தது. அதாவது மனிதர்களை பிரித்து ஆள்வதற்க்கு மனிதர்களாலேயே உருவாக்கபட்ட இனம், சாதி, மதம் என அனைத்தையும் கடந்து அனைவரும் சமம் என்பதே அந்த வரியின் அர்த்தம். இதனை கணியன் பூங்குன்றனார் கி.மு காலத்திலே கூறிவிட்டார். ஆனால் இத்தத்துவம் உலக மக்களுக்கு சென்று சேரவில்லை. இதனை உலக மக்களுக்கு உரைக்கும் வகையில் கூறியவர் “காரல் மார்க்ஸ்”. அவர் கூறியது “மனிதர்களில் உயர்வு தாழ்வு கிடையாது அனைவரும் சமம்”.இந்த இரண்டு தத்துவத்தையும் ஒப்பிட்டு பார்த்தால்  வார்த்தைகள் வேண்டுமானால் மாறியிருக்கலாமே  தவிர  கருது ஒன்று தான். 

இப்படி உலகிற்கே பொதுவுடைமை தத்துவத்தை  அறிமுகப்படுத்திய கார்ல் மார்க்ஸின் இளமை சற்று பருவம்  கசப்பானதாவே தான் இருந்தது.காரல் மார்க்ஸ் 1816-ம் ஆண்டு மத்திய ஜெர்மனியில் பிறந்தார். மார்க்ஸின் பெற்றோர்கள் யூத மதத்தை சார்ந்தவர்கள். அப்போதிருந்த அரசியல் நெருக்கடியால் மார்க்ஸின் தந்தையான ஹைன்றிச் மார்க்சு கிறித்துவ மதத்திற்கு  மாறினார்.1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் பணியாற்றி வந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிஸ் நகருக்கு சென்றார். அங்கு 1844-ல் பிரெட்ரிக் எங்கெல்சை  சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.

பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜென்னியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்ஸ் , ஜென்னிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார்.னால் காதலுக்குரியவரை மணந்தபோது வறுமையையும் தன் வாழ்க்கைத் துணையாகச் சேர்த்துக்கொண்டார். நிரந்தரமற்ற வேலை, ஆளும் வர்க்கம் கொடுத்த நெருக்கடிகள், கொன்று தின்னும் வறுமை என வாழ்ந்தாலும் அதற்கிடையிலும் காதலை வளர்க்கத் தவறவில்லை அந்த லட்சியத் தம்பதிகள்.

ஒருநாள் இரவு குழந்தைகள் பசியினால் வீறிட்டு அழுதன. அந்தத் தாய் தன் குழந்தைகளுக்குப் பால் கொடுக்க முயற்சித்தாள். ஆனால் அவள் மார்புகளில் பால் சுரக்கவில்லை; ரத்தம்தான் சுரந்தது. தொடர்ச்சியான வறுமை துரத்திய நிலையில்,  ஒரு குழந்தை இறந்தபோது, அந்தக் குழந்தையின் உடலைப் புதைக்க அந்த மாபெரும் சிந்தனையாளனிடம் பணமில்லை. தன் மேல்கோட்டை விற்றுதான் தன் பிரியத்துக்குரிய குழந்தையின் உடலைப் புதைத்தார். நம்மைப் பொறுத்தவரை கோட் என்பது ஆடம்பரமாக இருக்கலாம். ஆனால் குளிர் நிறைந்த மேற்கத்திய நாடுகளில் கோட் அத்தியாவசியம். தனது கோட்டை விற்றுக் குழந்தையைப் புதைத்த அந்தத் துயரத்துக்குரிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்  காரல் மார்க்ஸ்!

இப்படி மார்க்சின் இளமை காலம் கடின காலமாக தான் இருந்தது. இருப்பினும் இதை எதையும் கண்டு வருந்தாமல், தொழிலார்களுக்காவும், ஏழை எளிய மக்களுக்காவும் போராடி கொண்டிருந்தார். தனக்கு முன்பிருந்த தத்துவவாதிகளின் சிந்தனைகளைக் கரைத்துக் குடித்தவர்.

‘’எல்லாத் தத்துவங்களும் உலகம் எப்படித் தோன்றுகின்றன, இயங்குகின்றன என்று சிந்திக்கின்றன. நமது வேலை உலகம் எப்படி தோன்றியது என்று சிந்திப்பதில்லை, மாறாக உலகத்தை மாற்றியமைப்பதே!” என்றார். அதற்கு என்ன செய்வது? “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்! நீங்கள் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால் உங்களுக்காகப் பொன்னான ஓர் உலகம் காத்திருக்கிறது!” என்ற புகழ்பெற்ற வாக்கியத்தை மார்க்ஸ் எழுதியது வரலாற்றின் பல திருப்பங்களுக்குக் காரணமானது.இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட சம்பவம், மார்க்ஸின் வாழ்க்கையில் ஒரு சின்ன துயரக்கீற்று மட்டுமே. தன் காதல் கணவன் மாபெரும் சிந்தனையாளன் என்பதைப் புரிந்துகொண்டு, எல்லாவிதத் துயரங்களையும் ஏற்றுக்கொண்ட ஜென்னி மார்க்ஸ், உலகின் அற்புதமான காதலிகளின் வரலாற்றில் நிரந்தரமாக நினைவுகூரப்படுவார், அதேபோல்தான் மார்க்ஸ்-ஏங்கெல்ஸ் இருவருக்கும் இடையிலான நட்பும்கூட. ஏங்கெல்ஸும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர்தான். மார்க்ஸின் சிந்தனைகளும் நூல்களும் வெளிவருவதற்குப் பொருளாதார அடித்தளம் அமைத்துக்கொடுத்தவர் ஏங்கெல்ஸே.

மார்க்ஸ் பல நாடுகளில் இருந்து துரத்தப்பட்டார். வாடகை கொடுக்க முடியாமல் பல வீடுகளில் இருந்தும் துரத்தப்பட்டார், ஆனாலும் அவர் தன் சிந்தனைகளையோ செயல்பாடுகளையோ நிறுத்திக்கொள்ளவில்லை. மார்க்சின் சிந்தனையால் இந்த மனித குலத்துக்குக் கிடைத்த நிகரற்ற அறிவுக் களஞ்சியம் ‘மூலதனம்’. அதற்குப் பின் கோடிக்கணக்கான புத்தகங்கள் உலகின் பல பாகங்களில் இருந்து உருவாகிவிட்டபோதும் ‘மூலதனம்’ எப்போதும் உலகின் ஆகச் சிறந்த நுால்களில் ஒன்றாக இன்றும் இருக்கிறது.

உற்பத்தி உறவுகள், பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம், அரசு என்னும் வர்க்க நலன் பேணும் கருவி, கருத்தை முதலாகக் கொண்டுதான் சமூகம் இயங்குகிறது என்னும் பார்வைக்கு மாறாக பொருளின் அடிப்படையில் சமூக மாற்றத்தை ஆராயும் பொருள்முதல்வாதம், மதம் மனிதனுக்கு அபினாக இருந்ததோடு எப்படி இரக்கமற்ற உலகத்தின் இரக்கமுள்ள ஆன்மாவாக மாறியது என்னும் சிந்தனை முன்னெடுப்பு, அந்நியமாதல் என மார்க்சின் ஆய்வுகள் விரிந்து பரந்தவை. மார்க்சின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதவர்கள்கூட அவசியம் படித்து விவாதிக்கப்பட வேண்டியவை அவரது சிந்தனைகள். ‘தொழிலாள வர்க்கம் ஒன்றிணைந்து புரட்சி செய்து,  முதலாளித்துவ வர்க்கத்தையும் அதன் கருவியான அரசையும் தூக்கியெறிந்து, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தை ஏற்படுத்தும்’ என்ற அவரது கனவை லெனின் ரஷ்யாவில் நடத்திக்காட்டினார்.

மார்க்ஸின் சிந்தனைகள் எப்போதும் இறுதியானவை. மார்க்ஸுக்குப் பிறகு உலகின் பல்வேறு நாடுகளில் தோன்றிய மார்க்சியச் சிந்தனையாளர்கள் காலத்தின் பாடங்களைக் கணக்கெடுத்து, மார்க்சியத்தைச் செழுமைப்படுத்தத்தான் செய்கின்றனர். ஒதுக்கப்பட்ட மக்களுக்காக எந்தத் தியாகங்களையும் செய்யும் செம்படை எல்லா நாடுகளிலும் இருக்கிறது.

மனிதகுலம் உள்ளளவும் மார்க்ஸ் நினைக்கப்படுவார். ஏனெனில் அவர் தேசியம், மொழி, இனம் என எல்லாவற்றுக்கும் அப்பால் உலகில் உள்ள ஒடுக்கப்பட்ட மனிதர்களுக்காகச் சிந்தித்த மாமனிதன்.

Leave a Reply

Your email address will not be published.