94-வது ஆஸ்கார் விழாவில் நடந்த சுவாரசிய நிகழ்வுகள்….

சினிமாவின் சாலச் சிறந்த விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து சரியாக ஒருவாரம் ஆகின்றது. 94 ஆண்டு கால ஆஸ்கர் வரலாற்றில் ஏராளமான சினிமா குணச்சித்திர நடிகர்களையும் சவரசியமான நிகழ்வுகளை லாஸ் ஏஞ்சல்ஸ்’ன் டோல்பி தியேட்டர் பார்த்துள்ளது. எம்முறையும் இல்லா வண்ணம் இந்த முறை சற்று வினோதமாக உலக மக்களின் கவனத்தை ஆஸ்கர் விழாவும் நடிகர் வில் ஸ்மித்’ம் பெற்றுள்ளார் என்றால் மிகையில்லை.

அலோபீசியா (Alopecia) எனும் நோயினால் முடியை இழந்து வரும் வில் ஸ்மித் மனைவி ஜடா பின்கெட் ஸ்மித், பெரும்பாலும் தனது தலையினை மொட்டையடித்துக் கொள்வதே வழக்கமாக வைத்திருந்தார். இந்நிலையில் அது குறித்து காமெடி நடிகர் கீறிஸ் ராக் நக்கலடித்த போது மேடையேறிச் சென்று அவரது கன்னத்தில் அறைந்தார் வில் ஸ்மித். “என் மனைவி குறித்து உன் வாயிலிருந்து இனி வார்த்தைகள் வரக்கூடாது” என காட்டமாக சொல்லிவிட்டு இறங்கினார்.இதனை இந்த உலகம் அவ்வளவு எளிதில் மறந்துவிடாது.

நகைச்சுவை என்கின்ற போர்வையில் நடக்கின்ற பல நிகழ்ச்சிகளில், நகைச்சுவை பட்டிமன்றங்களில், stand-up comedy செய்யும் தளங்களில் நடக்கும் வார்த்தை வன்முறைகளுக்கும், உடல் ரீதியான கேலிக்கைகளுக்கும் அளவில்லாமல் தான் இருந்துகொண்டு வருகின்றது. இந்நிலை இந்த சமூகத்தில் அனைத்து தரப்பினருக்கும் நிகழ்ந்துள்ளது, இன்னும் சொல்லப்போனால் நம்மை நாமே அறியாமல் பல இடங்களில் கேலிக்கை செய்திருப்போம். அவை எல்லாவற்றிருக்கும் விழுந்த பெரிய அடியாக தான் பார்க்கிறேன்.

தமிழக பட்டிமன்றங்களில் பேசுவோர், பெரும்பாலும் பெண்களை மையம் கொண்டு காமெடி செய்யும் அறுவறுக்க தக்க விசயங்களை தவிர்க்க வேண்டும். கொடுமையிலும் கொடுமை அந்த அறமற்ற காமெடிகளை பெண்களே பேசுவது தான். மெத்த படித்த பேச்சாளர்கள் ஆன்றோர்கள் என சொன்னாலும் அவர்கள் பேசுவது அப்படியே தான்.
மறுபுறம், வாய்ச்சவடலால் கீறிஸ் ராக் செய்ததற்கும் வில் ஸ்மித் அடித்ததற்கும் எவ்வித வித்யாசமும் இல்லை. மன ரீதியாக ராக் செய்ததை தான் ஸ்மித் உல ரீதியாக செய்துள்ளார். “Love will make you to do crazy things” என்று ஸ்மித் சொன்னாலும் துன்புறுத்தியது ஒன்று தான். போலீசார் ஸ்மித்தை கைது செய்ய தயராக இருந்ததாக சொல்லப்படும் ஊடங்களும் போலீசாரும் கிறீஸ் ராக்’ஐ பற்றி எதுவும் பேசவே இல்லை.

இந்தப்பிரச்சினையில் நாம் மறந்து அல்லது கடந்து சென்ற மேலும் சில சுவரசியமான நிகழ்வுகள் இந்த 94 ஆம் ஆஸ்காரில் உள்ளது. இந்த உலகின் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான தினமாக அன்றைய நாள் கழிந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் சிலர் ஆஸ்கார் விருதின் வரலாற்றில் முதன்முறையாக பெற்றுள்ளனர்.

1969ல் நடந்த அமெரிக்காவின் உட்ஸ்டாக் (Woodstock, Florida) மற்றும் ஹார்லம் (Harlem, NY) கலாச்சார திருவிழா வரலாற்று குறிப்புகளின் இன்னும் மக்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் . அதில் ஹார்லம் கலாச்சார திருவிழா குறித்து ஆவணப் படம் எடுத்து அதற்கு விருது பெற்றுள்ள அமெரிக்க இசைக்கலைஞர் அமீர் தாம்சன் (Questlove @ Amir Thomson) தனது விருதினை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமர்பிப்பதாக அறிவித்துள்ளார்.

துணை நடிகருக்கான பிரிவில் விருது வென்றுள்ள அமெரிக்க நடிகர் ட்ரோய் கொட்சுர் (Troy Kotsur) ஆஸ்காரினை எடுத்துச்செல்லும் முதல் செவித்திறனற்ற கலைஞர் ஆவார். ஒரு பிறவி செவித்திறனற்ற கலைஞன், செவித்திறனற்ற பெற்றோரின் குழந்தைகள் குறித்த கதையான CODA எனும் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்றுள்ளார்.

Queer Woman of Colour என ஆங்கிலத்தில் வரையறுக்கப்படும் இன நிற வேற்றுமை பிண்ணனி தவிர்த்த பெண்கள் பிரிவில் ஆரியான டி போஸ் (Ariana DeBose) அவர்கள் முதன்முதலாக ஆஸ்கார் விருது தட்டிச்சசென்றுள்ளார். LGBTQ+ உரிமைகள் பல்வேறு நோக்கங்களில் தூக்கிப் பிடித்து பேசிய பெருமை இந்த 94 ஆம் ஆஸ்கார் விருது விழாவிற்கு உண்டு.

சிறந்த நடிகைக்கான விருது பெற்ற ஜெசிகா ச்சேஸ்டின் (Jessica Chastain) தனது விருது ஏற்பு பேச்சின் போது LGBTQ+ மக்களுக்கான உரிமைகளைப் பற்றி பேசி அவர்களுக்காக நின்றுள்ளார். “Don’t Say Gay’ bill” என ஆரம்பித்து “We’re faced with discriminatory and bigoted legislation that is sweeping our country with the only goal of further dividing us,” என்று ஆணித்தரமாகக் கூறி மேடையில் இருந்து இறங்கியுள்ளார்.

ஒரு படத்திற்கான எழுத்து, நடிப்பு, இயக்கம் என அனைத்தையும் உள்ளடக்கிய விருதான Best Picture பிரிவில் ஆஸ்கார் வரலாற்றில் ஒரு ஜப்பானிய படம் பரிந்துரை செய்யப்பட்டதில் இதுவே முதலாகும். ஹமாகுச்சி ரைசுக்கியின் (Hamaguchi Ryusuke) Drive My Car எனும் படத்தின் தலைப்புகள் ஜப்பானிய மொழியில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இரண்டு ஜப்பானிய படங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் ஜப்பானிய மொழியில் இதுவே இருந்தது.அதுபோல விழாவினை தொகுத்து வழங்கிய மூவரும் பாலின சமத்துவத்தை போற்றும் நோக்கத்தில் அமைக்கப்பட்டது இதுவே முதன்முறை.

இப்படி பல ரூசிகரங்களை அடக்கியுள்ள 94 ஆம் ஆஸ்கார் விருது விழா, அர்த்தமும் அறமுமற்ற நகைச்சுவை காரணத்தினாலும் அதனை வன்முறையால் எதிர்கொண்ட மற்றொரு காரணியாலும் செயற்கையாக இதனைப் பற்றி மட்டும் உலகம் விவாதித்து விட்டு, கொண்டாட வேண்டிய மனிதர்களையும் பொருண்மையையும் கொண்டாடாமல் செயலிழந்து உள்ளது இந்த சமூகம்.

-திரு.பிரேம் முருகன்.

Leave a Reply

Your email address will not be published.