இறந்த பறவைகளை தேடி – ஜோத்பூரில்  இறந்து கொண்டிருந்த பட்டை கழுத்து புறா: கிருபா நந்தினி

சிலிக்கா ஏரியில் உடல் கூறு ஆய்வு செய்த பறவைகளை ஃபளய்ட்ல அனுப்பீட்டு நாங்கள் ரயிலில் வந்து சேர்ந்தோம். கோவையில் அலுவலக வேலைகளை செய்து கொண்டிருந்திருந்தோம். எப்போதும் போல பறவைகளைப் பற்றி குறிப்பு எடுத்து கொண்டிருக்கும் போது, பறவைகள் ஏதாவது இறந்துள்ளதா என தினசரி செய்தித்தாள்களை வாசிக்கும் வழக்கத்தால், நூலகத்துக்குச் சென்று வாசித்தேன்.  

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் மாவட்டத்தில் ஒரு குறிபிட்ட பகுதியில் மட்டும் இதுவரை கிட்டத்தட்ட 900 பட்டை கழுத்து புறா (Eurasian collared Dove) இறந்துவிட்ட செய்தியை படித்த உடனே ஆய்வகத்துக்குச் சென்று விஞ்ஞானியிடம் கலந்து பேசினோம். ஒருவழியாக அப்பகுதியில் உள்ள வனத்துறையைச் சார்ந்த கால்நடை மருத்துவரின் தொடர்பு எண் கிடைத்து பேசினோம். அவர் ஒரு ரயில் நிலையத்தின் பெயரைச் சொல்லி அங்கு ரயில் பதிவு செய்து வந்துவிடுமாறு கூறினார். 

எங்கள் அலுவலகத்தில் அதற்கான பணம் பெற விண்ணப்பித்து, விஞ்ஞானிகளிடம் அனுமதி கடிதம் தயார் செய்து, அடுத்த நாளுக்காக ரயில் சீட்டு பதிவு செய்பவர்களிடம் சொல்லி சென்னையிலிருந்து பதிவு செய்த்தில் வேய்டிங் லிஸ்ட்டில் வந்தது. இருப்பினும் உடல் கூறு ஆய்வுக்குத் தேவையான ஆய்வகப் பொருட்கள் மற்றும் எனக்குத் தேவையான சொந்த பொருட்களை பேக் செய்து பயனித்துக்கு தயாரானேன். கன்ஃபார்ம் ஆவதுக்கு முன்பே கோவையிலிருந்து சென்னைக்கு பேருந்தில் ஏறினேன், பேருந்து ஈரோட்டை கடக்கும் பொழுது தான் கன்ஃபார்ம் ஆனது ராஜஸ்தான் டிக்கெட், மன நிம்மதி ஏன்னென்றால் வட மாநிலங்களில் ரயில் பயணம் பற்றி முதல் பயண கட்டுரையிலேயே குறிப்பிட்டேன். 

ஆண்கள் அணிந்திருந்த சிவப்பு டர்பன், வெள்ளை ஜிப்பா பலிச் என ரயில்நிலையப் பெயர் பலகைக்கு முன்பே ராஜஸ்தானுக்குள் ரயில் நுழைந்துவிட்ட தகவலை சொல்லியது.  ஆனால் நான் இரங்க வேண்டிய ரயில் நிலையம் ஜோத்பூர். கால்நடை மருத்துவருக்கு தகவல் சொன்ன பொழுது “You don’t come outside of the railway station until I come“என்று சொன்னார். பொதுவாக வெளியூர் சென்றால் அந்த ஊர் மக்கள் சொல்லும் அறிவறைகளை கேட்டு செயல்படுவது பாதுகாப்பானது. ஆனாலும் எனக்கு இந்த ஊர் புதிது என்பதால் இதை சொல்கிறார் என சாதரணமாக எடுத்துக்கொண்டேன். அவர் இரு சக்கர வாகனத்தில் உட்கார வைத்த பிறகு தான் சொன்னார் “Its very dangerous area, anything can happen at anytime, that’s why I told like that” என்று. தூக்கி வாரி போட்டது. எனது பாதுகாப்பு கருதி அவர் வீட்டிலேயே தங்க வைத்தார். அவர் வீடு அரசு குடியிருப்போர் கட்டிடம் தான். அந்த பகுதியில் உள்ள கற்களினால் கட்டபட்டிருந்தது சிமென்ட், வண்ணப்பூச்சுக்கள் இல்லாமல் இயற்கையான அழகில் கட்டிடக்கலை கவர்ந்தது.

E:\NCSCM_Report\Lab Hard disk\RAJASTHAN, Jodhpur\Field visit and sample collection\DSC08730.JPG

ரயிலில் மூன்று நாட்களை கழித்து மதியம் சென்றடைந்ததால் அன்றைக்கு கள ஆய்வுக்கு செல்லவில்லை. தற்போது வரை பறவைகள் இறப்பு பற்றி என்ன நடந்தது என்று பகிர்ந்து கொண்டார். அது அடுத்த நாள் கள ஆய்வுக்கு சென்று என்ன செய்ய வேண்டும் என திட்டமிட ஏதுவாக இருந்தது. 

அன்றிரவு அவருடைய மனைவியிடம் எனக்கிருந்த ராஜஸ்தான் பற்றிய பல கேள்விகளை கேட்டு தொல்லை செய்தேன். அவர் சேலையால் தலையை மூடியிருந்தார். அவர்களின் உடை கலாச்சாரம் அது. ஆனால் வெளியிலிருந்து ஆண்கள் யாராவது வந்தால் முகத்தை முழுவதுமாக மறைத்துக்கொள்வதோடில்லாமல் தலையை குனிந்துகொள்கிறார்கள். ஆண்களை எந்த பெண்களும் நிமிர்ந்து பார்ப்பதில்லை. இதுவும் அவர்கள் வழக்கம். என்ன கொடுமை?. நிறைய பதிர்ந்து கொண்டதில் மிகுந்த வருத்தப்பட்டு பேசியது அவர்கள் இந்தி ஆதிக்கத்தால் இழந்துவிட்ட ராஜஸ்தான் மொழி பற்றி தான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அடுத்த நாள் என்னுடன் சேர்ந்து எங்கள் துறையின் மற்றொரு ஆய்வளரான தேஜாஸ் கர்மாக்கரை அனுப்பிவைத்தார் எனது ஆசிரியர், இவர் மற்றுமொரு ஆய்வான அழிந்து வரும் சாரசக் கொக்குகள் பற்றிய ஆய்வில் குஜராத்தில் மேற்கொண்டிருந்தார். தேஜாஸ்   முதுகலை பட்டபடிப்பை ராஜஸ்த்தான் பல்கலைக்கழகத்தில் படித்தவர், மேலும் ரான்தம்பூர் புலிகள் சரணாலயத்திலும் ஆய்வுசெய்திருக்கிறார், ஆதலால் வனத்துறையில் நண்பர்கள் இருந்தனர், எங்களுடைய வந்த ஆய்வை முடித்து கடைசி நாள் ரான்தம்பூர் புலிகள் சரணாலயம் இவருடைய உதவியுடன் சென்றோம். 

அடுத்த நாள் மூவரும் காலையிலேயே மருத்தவரின் மனைவி சமைத்த சப்பாத்தி சப்ஜி  உண்டு பறவைகள் இறந்த இடங்களுக்கு சென்றோம். நகரத்தைவிட்டு ஐந்து கிலோ மிட்டர் வெளியே சென்றதும் நாம் கற்பனை செயிதுவைத்திருந்த பாலைவனத்தை பார்க்க முடிந்தது. ஆங்காங்கே சிறு சிறு குடிசை வீடுகள். வீடுகளை ஒட்டி மிகச்சிறிய இடத்தில் சோலம் விதைத்து அருவடை செய்ய தாயாராக இருந்தது. இருபது கிலோ மீட்டரில் பறவைகள் இறந்த இடத்தை அடைந்தோம். நாங்கள் சென்ற பொழுதும் செய்தி கிடைத்து கிட்டதட்ட ஐந்தாம் நாள். அப்பவும் புறாக்களின் இறப்பு தொடர்ந்ததில் வருத்தமாக இருந்தது. 

E:\NCSCM_Report\Lab Hard disk\RAJASTHAN, Jodhpur\Field visit and sample collection\DSC08767.JPG

சில புறாக்கள் இறந்து அங்கிருந்த ஓரிரு மரங்களில் தொங்கிக் கொண்டிருந்தன, சில கீழே சிதறிக் கிடந்தன. மேலும் சில புறாக்கள் பறக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. அவற்றை பதிவு செய்து தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு அனுப்பிவைத்தோம். 

இறந்த பட்டை கழுத்து புறாக்களை உடல் கூறு செய்து பார்த்ததில் அங்கு விவசாயம் செய்திருந்த மக்காச் சோளம் இறுதியாக சாப்பிட்டிருந்தது. அதனுடைய இயல்பான உணவு என்றாலும் வேதிப்பொருட்களை ஆராய அவற்றையும் தனியாக சேகரித்து, அங்கிருந்த நபர்களிடம் விசாரித்தோம். அப்பகுதி பெண்களும் சேலையால் முகத்தை மறைத்துக்கொண்டு தலைகுணிந்தே நாங்கள் கேட்ட கேற்விகளுக்கு மட்டும் ஓரிரு வார்த்தைகளில் பதில் சொன்னார்கள். எனக்கிருந்த சந்தேகங்களை வரும் வழியில் விசாரித்து விஞ்ஞானியிடம் பகிர்ந்துகொண்டதில் அவருக்கு தோன்றிய கேள்விகளை கேட்டார். அதற்கும் பதில் தேடத்தொடங்கினோம். 

E:\NCSCM_Report\Lab Hard disk\RAJASTHAN, Jodhpur\Field visit and sample collection\DSC08748.JPG

அடுத்த நாள் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் இருவர் எங்களுடன் சேர்ந்தனர். முதல் நாள் பறக்கமுடியாமல் இருந்த பறவை இன்றைக்கு இறந்து கிடந்தது மிகுந்த வேதனையளித்தது. இன்றைக்கு சில புறாக்கள் பறக்க முடியாமலிருந்தது. எப்படியும் நாளை நீ இறக்க போகிறாய் என்று கையில் வைத்து சொல்லிக்கொண்டிருந்தேன். அதே நேரத்தில் காரணத்தைக் கண்டறிந்து மேலும் இதே போல் நடக்காமலிருக்க இந்த பறவையை பயன்படுத்த அவற்றிலிருந்து ரத்தம் சேகரித்துக்கொண்டோம். முதல் நாள் அப்பகுதி மக்களிடம் விசாரித்ததில் வேறு சில இடங்களிலும் இதே போல் நடப்பதை கூறினர். அந்த பகுதிகளையும் சென்று பார்த்ததில் அங்கும் இதே நிலை.  அங்கிருந்தும் பட்டை கழுத்து புறாக்களின் உடல் பகுதிகளையும், மக்களிடமிருந்து மேலும் சில தகவல்களையும் சேகரித்துக்கொண்டு திரும்பினோம். அவர்களுடன் பயணித்ததில் பல தகவல்களை பகிர்ந்துகொண்டோம். 

திரும்பி வரும் வழியில் அனைவரும் புகைப்படங்களை எடுத்து ரிலாக்ஸ் ஆனோம். பாலைவன மணலில் வீசிய காற்றில் ஏற்பட்டிருந்த வரிகள் இயற்கை ஓவியமாக காட்சியளித்தது. பாலை வனம் என்றாலே வறட்சி மட்டுமல்ல என்ற எண்ணம் எனக்குள்ளிருந்து மறைந்தது. சிறிது நேரம் துயரத்திலிருந்து வெளிவந்தாலும் இந்த இறப்புகள் எதனாலிருக்கும் என்ற கேள்வி ஒரு புறம் மனதுக்குள் விடைகளை தேடிக்கொண்டே இருந்தன. 

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…