தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு – லலிதா,பத்மினி,ராகிணி தமிழ் சினிமாவுக்கு புகழ் கூட்டிய தங்கதாரகைகள்

தமிழ் சினிமாவை எம்.ஜி.ஆர், சிவாஜி இருவரும் எப்படி 50களில் உச்சத்துக்கு
அழைத்துச்சென்றனறோ அதற்கு சற்றும் குறைவில்லாத புகழைதேடிதந்தவர்களுள்
பானுமதி, பத்மினி, சாவித்ரி, சரோஜா தேவி ஆகிய நால்வருக்கும் சம பங்கு உண்டு.


வெறும் அழகு பதுமைகளாக இல்லாமல் நால்வருமே நடிப்பில் சுரப்புலிகளாக
விளங்கினர். இன்னொரு வகையில் சொன்னால் 50களின் சினிமாவை
ஆட்டிப்படைத்தனர் . சாவித்ரியும், சரோஜா தேவியும் 50களின் பிற்பகுதியில் புகழ்
பெற்றாலும் இவர்களுக்கு முன்னரே தம் காந்த கண்களால் தமிழ் மக்களின் இதயத்தை
கொள்ளையடித்தவர்கள் பானுமதியும், பத்மினியும்.


திரையுலகில் பத்மினி நட்சத்திரமாக அறிமுகமாவதற்கு முன் அவர் தன் அக்காள் லலிதா,
தங்கை ராகினி ஆகியோருடன் திருவிதாங்கூர் சகோதரிகள் என்றே பெயருடன் நாட்டிய
மங்கைகளாக அறிமுகமானார். திருவனந்தபுரம் அரண்மனையில் ஆஸ்தான வித்வானாக இருந்தவர் குரு கோபிநாத். அவரிடம் நாலு வயது பத்மினியும், அக்கா லலிதாவும் கதகளி நடனம் கற்றுக்கொள்ளத் தொடங்கினர். கடைக்குட்டி ராகினி அப்போது குழந்தை. இவர்களுள் சிறுவயதிலேயே தன் அடவுகளாலும் நிருத்தங்கள் மற்றும் கண் இடுப்பு அசவுகளாலும் அனைவரையும் சுண்டி இழுத்தவர் பத்மினி.

இச்சமயத்தில் ஒருமுறை இயக்குனர் கே சுப்ரமணியம் மனைவி எச்.டி சுப்புலட்சுமியுடன் திருவிதாங்கூர் அரண்மனைக்கு சென்ற போது இவர்களது நிகழ்ச்சியை பார்க்க அவர் இவர்களுக்கு உடனே பரத நாட்டியம் கற்றுக்கொள் உங்களுக்கு இன்னும் புகழ் பெறுவீர்கள் என சொல்ல அதன்படி திருவிடை மருதூர் பிள்ளையை வரவழைத்து அவரிடம் பரதம் கற்றுக்கொண்டனர் .


அவருக்கு பத்து வயது வயசு ஆனபோது அரங்கேற்றம் ஆனது. ஒன்பது கெஜம்
சேலையில் பாலகி பத்மினி ஆடிய ஆட்டத்தைக்கண்டு வியந்த சிறப்பு விருந்தினர்
ஜோத்பூர் மகாராஜா ஆச்சரியத்தில் அசந்துபோனார் என்ன திறமை! என்னே திறமை!!
இந்த பெண் வருங்காலத்தில் மிகபெரிய நட்சத்திரமாக நாட்டிய உலகில் முடிசுடுவர் என
அன்றே ஆருடம் சொன்னார் . தொடர்ந்து அக்கா லலிதாவோடு பத்மினி இணைந்து தர்பார் நாட்டியங்களில்பங்கேற்றார். அக்கா தங்கை மூவருமாக நடனம் ஆடும் அழகு பட்டி திட்டி முழுக்க பரவத்துவங்கியது .


அன்றைக்குப் ‘பாரிஜாத புஷ்பகரணம்’ நாடகம். அதில், பத்மினிக்கு நாரதர் வேடம்
அன்றிய நிகழ்ச்சிக்குத் . தலைமை கலைவாணர். மூவரியும் பார்த்த கலைவாணருக்கு
அவர்கள் அழகிலும் நடனத்திலும் ஆச்சரியம் ‘தேவலோகத்தில் எல்லாரும் அழகாக
இருப்பாங்கன்னு இப்பத்தான் தெரியுது. நாரதர்கூட ரொம்ப அழகாக இருக்கிறார்’. என
பத்மினியை பாரட்டினார் .அத்தோடு நில்லமால் இந்த பெண் வருங்காலத்தில் மிகச்சிறந்த
நடிகையாக வருவார் எனவும் வாழ்த்தினார் .

பதமினியின் மாமா , பம்பாயில் கடற்படையில் கமாண்டராக பணி புரிந்து வந்தார்.
அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் தங்கியிருந்தவர், உலகப் புகழ்பெற்ற நாட்டியக்
கலைஞர் உதயசங்கர். விடுமுறைக்கு மும்பையில் மாமா வீட்டுக்கு வந்திருந்த
திருவிதாங்கூர் சகோதரிகளை உதய சங்கரிடம் மாமா அறிமுகப்படுத்தினார். மூவரது
நடனத்தையும் பார்த்த அவருக்கு மிகபெரிய அதிசயம். காரணம் அவர் நடத்தப்போகும்
கல்பனா எனும் நாட்டிய நிகழ்ச்சிக்கும் இது போன்ற பெண்கள் தான் தேவை .
அவர்களை உடனே தன் குழுவில் சேர்த்து பயிற்சி கொடுக்கத் துவங்கினார் . கல்பனா
நாட்டிய நாடகத்துக்கு கிட்டிய புகழ் காரணமாக அதை சினிமாவாக எடுக்க முன் வந்தார்
தயாரிப்பாளர் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ் வாசன் அவர்கள். அதிர்ஷ்டத்தை
என்ன சொல்ல என்று நடித்த முதல் படமான கல்பனா இந்தியாவிலிருந்து ஆஸ்கார்
கமிட்டியின் கதவை தட்டும் அளவுக்கு சிறப்பு பெற்றது.


சாதனையாளர்களை சபபெட்டிக்கு தள்ளிவிட்டு இறுதியில் போனால் போகிறது என
எட்டிப்பார்க்கும் ஆஸ்கார் மூன்று சகோதரிகளின் முதல் படத்துகே முதல் அதிசயம்
தான் .பின் அதில் கிடைத்த இந்த புகழை வீணாக்காமல் காலத்தை விரயம் செய்யாமல்
‘டான்ஸ் ஆஃப் இந்தியா’ எனும் நாட்டியக்குழுவை தொடங்கினார்கள் திருவிதாங்கூர்
சகோதரிகள். எட்டுப் பேர் கொண்ட சொந்தக் குழு அமைந்தது. பாம்பாட்டி நடனம், சிவபார்வதி, ராதாகிருஷ்ணன் போன்ற சின்னச்சின்ன நடனங்களை தாங்களே உருவாக்கி
ஆடினர். சென்னைக்கு வந்த, பட அதிபர் ஏ.வி.மெய்யப்பச் செட்டியாரின் கவனத்தில்
நின்றவை, லலிதா – பத்மினியின் நாட்டிய நிகழ்ச்சி விளம்பரங்கள். ஒரு நாள் எழும்பூர்
மீயூசியம் தியேட்டரில் அவர்களது நடனத்தைப் பார்த்தார்.அவர்களை அன்றே தன் புதிய
படத்தில் நாயகிகளாக ஒப்பந்தம் செய்யப்போன மெய்யப்ப செட்டியாருக்கு ஏமாற்றமே
மிஞ்சியது.


கல்பனா படம் தன் மாமாவுக்காக செய்து மத்தபடி எங்களுக்கு நடனம்தான் உயிர்.
சினிமாவில் நடிக்க விரும்பவில்லை விருப்பமும் இல்லை என மறுத்துவிட்டனர் .
‘உங்களுக்கு இஷ்டம் இல்லையென்றால் நீங்கள் நடிக்க வேண்டாம். ஆனால் ஒரு
பாட்டுக்கு வந்து ஆடினால் போதும்’ என கேட்க ஒரு வழியாக சகோதரிகள் நடனம்
தானே என ஒத்துக்கொண்டனர் .


வேதாள உலகம், 1948 ஆகஸ்டு 11-ல் வெளியானது. லலிதா – பத்மினி ஆடிய
பவளக்கொடி, பாம்பாட்டி நடனக் காட்சிகளுக்கு தடபுடலாகப் பிரமாதமாக விளம்பரம்
செய்திருந்தார் ஏவிஎம். ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தின் பார்வையும் பத்மினி மீது
பதிந்தது. தொடர்ந்து வாழ்க்கை, சந்திரலேகா, காஞ்சனா, பொன்னி என இருபதுக்கும்
மேற்பட்ட படங்களில் மூவரும் நடனம் ஆட அந்த நடனங்களுக்கு மிகுந்த வரவேற்பும்
பாரட்டும் கிடைத்தது .தொடர்ந்து என்.எஸ்.கே அவர்கள் பத்மினியை மண்மகன் படத்தில்
நாயகியாக ஒப்பந்தம் செய்ய தொடர்ந்து சிவாஜியுடன் முதல் படம், ஆக பணம் படத்தில் ஜோடி சேர்ந்தார் . அதன் பிறகு கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி, தூக்குத்
தூக்கி, எம் ஜி ஆருடன் மதுரை வீரன் என அவர் நடித்த அனைத்து படங்கலும் அவரை
புகழ் உச்சிக்கு அழைத்துசென்றது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *