எட்டாவது வெற்றியை பதிவு செய்த பிங்க் பேந்தர்ஸ்..!

புரோ கபடி தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணி 8-ஆவது வெற்றியை பதிவு செய்தது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பிங்க் பேந்தர்ஸ் தனது எட்டாவது வெற்றியை வசப்படுத்தியது.

போட்டியின் தொடக்கம் முதலே இரு அணிகளும் சமநிலையில் புள்ளிகள் பெற்றுவந்தன. எனினும் தீபக் கூடாவின் சிறப்பான ஆட்டத்தால் போட்டியின் முடிவில் ஜெய்ப்பூர் அணி 36க்கு 31 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்றது.

இந்த வெற்றியின் மூலம் புள்ளிகள் பட்டியலில் ஜெய்ப்பூர் அணி 5 இடத்துக்கு முன்னேறி அடுத்த சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. இரண்டாவதாக நடைபெற்ற தெலுங்கு டைட்டான்ஸ் மற்றும் பெங்கால் வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி சமனில் முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….