மும்பை சிட்டி அணியை எதிர்த்து ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி!

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி சீசன் 8 -ன் நேற்றைய ஆட்டத்தில் புள்ளிபட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணியும் 5-வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி அணியும் மோதின.விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 3 – 2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது.

இந்த சீசனின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவரும் ஜாம்ஷெட்பூர் அணியானது இதுவரை ஆடிய 14 ஆட்டங்களில் 7 வெற்றி 4 டிரா மற்றும் 3 தோல்விகளை சந்தித்துள்ளது.மும்பை சிட்டி அணியானது இதுவரை ஆடிய 15 ஆட்டங்களில் 7 வெற்றி 4 டிரா மற்றும் 4 தோல்விகளை சந்தித்துள்ளது.

நேற்றைய ஆட்டத்தின் தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜாம்ஷெட்பூர் அணியானது முதல் பாதி முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆட்டத்தின் 9 நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கிரெக் ஸ்டீவர்ட் ஒரு கோல் அடித்தார்.பிறகு ஆட்டத்தின் 30 நிமிடத்தில் ரித்விக் தாஸ் ஒரு கோல் அடிக்க முதல் பாதி நிறைவடைந்தது.

இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் 57 நிமிடத்தில் மும்பை சிட்டி அணியின் வீரர் ராகுல் ஒரு கோல் அடித்தார். பின்னர் ஆட்டத்தின் 86 நிமிடத்தில் டியாகோ மௌரிஷியோ பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஒரு கோல் அடிக்க ஆட்டம் சமனில் முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,ஆட்டத்தின் 94 நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ஜாம்ஷெட்பூர் அணி வீரர் கிரெக் ஸ்டீவர்ட் தனது இரண்டாவது கோல் அடிக்க 3க்கு – 2 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணி வெற்றி பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…