உங்களால் இந்தியாவிற்கே பெருமை… இளம் செஸ் வீரருக்கு வாழ்த்து தெரிவித்த சச்சின் டெண்டுல்கர்..!

கிரிக்கெட் உலகின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கர் 16 வயது நிரம்பிய இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் பிரக்னானந்தாவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நார்வேவைச் சேர்ந்த கார்ல்சனை இறுதிச்சுற்றில் வீழ்த்தி கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றதையடுத்து தனது வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

அந்த வாழ்த்து செய்தியில் அவர் கூறியதாவது, பிரக்னானந்தாவால் இந்தியாவிற்கே பெருமை. சதுரங்கப் போட்டியில் அவர் மேலும் பல்வேறு உயர் நிலையை அடைய எனது வாழ்த்துக்கள். அவருக்கு இது ஒரு அற்புதமான தருணம். 16 வயதில் அனுபவம் மிகுந்த கார்ல்சனை தோற்கடித்து மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள் என டுவிட்டரில் கூறியுள்ளார்.

பிரக்னானந்தா நார்வே வீரர் கார்ல்சனை வீழ்த்தும் மூன்றாவது இந்திய வீரர் ஆவார். தொடர் வெற்றிகளை பதிவு செய்து வந்த கார்ல்சன் இளம் இந்திய செஸ் வீரர் பிரக்னானந்தாவிடம் தோல்வியைத் தழுவினார். இந்த வெற்றி கார்ல்சனுக்கு எதிரான பிரக்னானந்தாவின் முதல் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.

vaaitha

நாங்க அதுக்காக அழையுறமா?… ‘வாய்தா’-வுக்கு எதிராக கொந்தளித்த வழக்கறிஞர்கள்!

வாய்தா என்ற திரைப்படத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது….