மணிப்பூரில் விளையாட்டு பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கும் பிரதமர்..!

பிரதமர் நரேந்திர மோடி இன்று மணிப்பூர் மாநிலத்தில் மாநிலத்தின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறார். இந்த புதிய பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலம் விளையாட்டுப் போட்டிகளில் சர்வதேச அளவில் வளர்வதற்கு உதவியாக இருக்கும். மணிப்பூர் மாநிலத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட அவர் இதனை தெரிவித்தார்.
மாநிலத்தின் முதல் விளையாட்டு பல்கலைக்கழகத்தை திறந்து வைத்து பிரதமர் மோடி பேசியதாவது, கடந்த 5 ஆண்டுகளாக மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அரசு விளையாட்டு மற்றும் புதிதாக தொழில் தொடங்குவோர் ஆகியோருக்கு பல்வேறு உதவிகளை செய்துள்ளது. மணிப்பூர் மாநிலம் பல்வேறு சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை கொண்டதாகும். அவர்களும் மீராபாய் சானு மற்றும் மேரி கோம் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். இந்த புதிய விளையாட்டுப் பல்கலைக்கழகம் மணிப்பூர் மாநிலத்தை சர்வதேச அளவிற்கு எடுத்துச் செல்லும் என்றார்.
கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் பளுதூக்குதலில் மீராபாய் சானு வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார். அதேபோல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் மணிப்பூர் மாநிலத்தில் அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சிப் பாதையை வகுத்துள்ளது என்றார். இன்று மணிப்பூர் மாநிலத்தின் ஹேய்நாங் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.