ரஷிய டென்னிஸ் வீரர்களுக்கு தடை! ரபேல் கண்டனம்.

விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் வரும் ஜூன் 27 ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில் விம்பிள்டன் அமைப்பு ரஷிய மற்றும் பெலாரஸ் அணி வீரர்கள் விளையாட தடை விதித்த விவகாரம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது. இதற்கு டென்னிஸ் ஜாம்பவான் வீரரான ரபேல் நடால் கண்டனம் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது முதலே, ரஷ்யா மீது பல விதமான தடைகளை சர்வதேச அமைப்பும், நாடுகளும் விதித்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாக டென்னிசில் மிக முக்கியமான தொடராக கருதப்படும் “விம்பிள்டன்” போட்டிகளின் தலைமை, ரஷிய டென்னிஸ் வீரர்களுக்கு தடை விதித்து உள்ளது.

ரஷிய வீரர் “டேனில்” தான் நடப்பு யூ.எஸ். ஓபன் சேம்பியன் ஆவார். அது போக பல முன்னனி வீரர்களும் ரஷியாவை சேர்ந்தவர்கள். இவர்களுக்கும் அந்த தடை பொருந்தும் என்பதால் டென்னிஸ் உலகம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது. இதற்கு பல முறை க்ராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற “ரபேல் நடால்” கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

” இது என் ரஷிய டென்னிஸ் நண்பர்கள் மீது செலுத்தப்பட்ட அநியாயம். போர் நடப்பது அவர்களுடைய தவறு அல்ல, அவர்களுக்காக வருந்துகிறேன், வரும் வாரங்களில் வீரர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…