காவலர்களின் குறைகளை கேட்ட்றிந்த டிஜிபி சைலேந்திரபாபு… குவிந்த மனுக்கள்!

DGP

திருச்சி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட9 மாவட்டங்களைச் சேர்ந்த காவலர்களின் குறைகளை டிஜிபி சைலேந்திர பாபு கேட்டறிந்தார். காவலர்களிடம் இருந்து மனுக்களை பெற்ற அவர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

இந்த குறைதீர்ப்பு கூட்டத்தில் உரையாற்றிய தமிழக காவல் துறை தலைவர் டி.ஜி.பி சைலேந்திர பாபு : தமிழக முதலமைச்சரின் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் மூன்று நிலைகளில் மனுக்கள் பெறப்பட்டு மனுக்கள் மீதான தீர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது.

அதில் காவல்துறையில் பணியாற்றக்கூடிய அனைத்து நிலை அதிகாரிகள் அலுவலர்கள் பணியாளர்களுக்கும் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு 38 மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 7 ஆணையரகங்களில் காவல் துணை ஆணையர்களால் 5236 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன.அவர்களால் தீர்க்கப்படாத மக்கள் 11 சரக காவல்துறை துணைத் தலைவர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களால் பெறப்பட்டு பரிசீலிக்கப்பட்டன.

கடந்த 3ஆம் தேதி அன்று வடக்கு மண்டல காவலர்களின் குறைகளை காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திர பாபு அவர்களால் 300 மனுக்கள் பெறப்பட்டது. கடந்த 8ஆம் தேதி சென்னை மாநகர காவலர்கள் 848 மனுக்கள் பெறப்பட்டு அதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து இன்று 16.12.21 மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த காவலர்கள் மற்றும் திருச்சி மாநகர காவலர்களின் குறைகளை கேட்டு நிவர்த்தி செய்யும் முகமானது நடைபெற்றுவருகிறது.அதில் கலந்து கொண்ட மாநகர காவல் துறை இயக்குனர் சைலேந்திரபாபு 600 மனுக்களை பெற்று அதற்கான தீர்வுகளை கண்டறிந்து வருவதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *