10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் கொரோனா தொற்று வேகம் குறைந்து வந்ததால், பொதுமுடக்கங்கள் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டது. ஆனால் டிசம்பர் மாதத்திற்கு மேல் மீண்டும் தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. அதானால் பாதிப்புகளுக்கு ஏற்றவாறு அந்தந்த மாநிலங்கள் பொதுமுடக்கத்தை அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையால்  , பள்ளி கல்லூரிகளில் மீண்டும் ஆன்லைன் கல்வி முறையையே பின்பற்றப்பட்டு வருகிறது.

எனவே இந்த ஆண்டு 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது நடைபெறும் என்பதையும் பொது தேர்வு நடைபெற்றால் அது ஆன்லைனில் நடைபெறுமா அல்லது ஆப்-லைனில் நடைபெறுமா என்ற கேள்விக்கு பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார். அவர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசியது “அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பால், மீண்டும் ஆன்லைன் கல்வி முறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காண பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்.அதில் எந்த மாற்றமும் இல்லை. மேலும் 10,11,12-ம் பொது தேர்வுக்கான பாடங்களை முடிக்க நேரம் வேண்டியுள்ளதால், இந்த ஆண்டு மே மாதம் தொடக்கத்திலோ, இறுதியிலோ பொது தேர்வு நடைபெறலாம்.” என்று கூறியுள்ளார்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *