அடுத்த ரௌண்டுக்கு போறதுக்கு முன்னாடி தடுப்பூசி போட்ருங்க!!! தமிழ்நாட்டில் 1 கோடி பேர் 2வது டோஸ் தடுப்பூசி செலுத்தவில்லை 

கடந்த 2019-ம் ஆண்டு சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கொரோனா, மக்களை  வாட்டி வதக்கி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும். அடுத்த மாதம் கொரோனா முற்றிலும் அழிந்து விடும் என்று சொல்லி சொல்லி இரண்டு ஆண்டுகள் கழிந்துவிட்டன. இரண்டு ஆண்டுகள் கழிந்த பின்பும் கொரோனாவின் கோரதாண்டவம் குறைந்த பாடில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி மட்டுமே தீர்வு என்ற ஒற்றை இலக்குடன் உலகின் பெரும்பாலான நாடுகள் பயணித்து வருகிறது. அதில் இந்தியாவும் ஒன்று. இந்திய மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துவதில்  ஒன்றிய அரசும், மாநில அரசும் தீவிரம் காட்டி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடியின்  பிறந்த நாள் கொண்டாடும் விதத்தில் கடந்த ஆண்டு செப்-17-ம் தேதி இந்தியாவில் 2 கோடி மக்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா எதிராக மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. இதுவரை தமிழ்நாட்டில் 6 மெகா  தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது.  அதில் சுமார் 4 கோடி மக்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது.இந்நிலையில்  தமிழ்நாட்டில் சுமார் 1 கோடி பேர் 2வது  தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தவில்லை என்று மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.மேலும் இதுவரை 4.27 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டதாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.