11 மாநகராட்சிகளில் காலூன்றிய பாஜக… உண்மை நிலவரம் என்ன?

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டி யிட்ட பாஜ.க, 308 வார்டு களை கைப்பற்றி உள்ளது. 11 மாநகராட்சிகளில் வெற்றி வாகை சூடி கால் பதித்துள்ளது.
கடந்த சட்டமன்றதேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக தமிழக நகர்ப்புற உள்ள் ளாட்சி தேர்தலில் வார்டு ஒதுக்கீடு பிரச்சினை காரணமாக ல் கூட்டணியில் இருந்து விலகி* தனித்து போட்டியிட்டது.
ள தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் தனித்து களம் இறங்கினர். பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், தமிழகம் முழுவதும் 308 வார்டுகளில் பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது. இதில் 22 மாநகராட்சி வார்டுகள் அடங்கும். திமுக, அதிமுக., காங்கிரஸ் கட்சிக்கு அடுத்தபடியாக மாநகராட்சியில் பாஜக அதிக வார்டுகளை கைப்பற்றி உள்ளது.
குறிப்பாக கன்னியாகுமரி மாநகராட்சியில் அதிகபட்ச மாக 11 வார்டுகளை பிடித்துள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் 2 வார்டுகளிலும், சென்னை, கடலூர், காஞ்சீபுரம், ஓசூர், த்ஞ்சாவூர், திண்டுக்கல், மதுரை, சிவகாசி, வேலூர் ஆகிய மாநகராட்சிகளில் தலா ஒரு வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இவர்களில் 9 பேர் பெண்கள் ஆவர். இந்த வெற்றியின் மூலம் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளில் பாஜக கால் பதித்துள்ளது.