சாதித்த திமுக; சறுக்கிய அதிமுக… கட்சிகளின் வெற்றி விகிதம் என்ன?

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்று வாக்கு எண்ணிக்கையானது பிப்ரவரி 22 அன்று 268 மையங்களில் எண்ணப்பட்டது. இத்தேர்தலில் 60.70% வாக்குகள் பதிவாகியிருந்தது.

அதிமுக, பாஜக, பாமக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி, தேமுதிக, விஜய் மக்கள் இயக்கம் என கட்சிகள் தங்களின் பலத்தை அறிவதற்காக தனித்தே இந்த முறை களம் கண்டன. சட்டமன்றத் தேர்தலில் இருந்த தனது கூட்டணி கட்சிகளுடன் திமுக தேர்தலை எதிர்கொண்டது. இதில் எந்தெந்த கட்சி எத்தனை சதவீத வாக்குகளை பெற்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

21 மாநகராட்சிகளில் 1374 பதவிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக 69.14 சதவீத வாக்குகளையும், அதிமுக 11.94 சதவீத வாக்குகளையும், பாஜக 1.60 சதவீத வாக்குகளையும், சிபிஐ – 0.95 சதவீத வாக்குகளையும், காங்கிரஸ் 5.31 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் 9.10 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

3,843 நகராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் திமுக 61.41 சதவீத வாக்குகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. 2வது இடத்தில் அதிமுக 16.60 சதவீத வாக்குகளையும், மூன்றாவது இடத்தில் பிஜேபி 1.46 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் 1.07 சதவீத வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.49 சதவீத வாக்குகளையும், தேமுதிக 0.31 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. பிற கட்சிகள் மொத்தமாக 14.62 சதவீத வாக்குகளை பெற்றுள்ளன.

பேரூராட்சியைப் பொறுத்தவரை திமுக 57.58 சதவீத வாக்குகளையும், அதிமுக 15.82 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் கட்சி 4.83 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. பாஜக 3.02 சதவீத வாக்குகளையும், மார்க்சிஸ்ட் 1.33 சதவீத வாக்குகளையும், தேமுதிக – 0.30 சதவீத வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் – 0.34 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது. பிற கட்சிகள் 16.52 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

நெருக்கடி நிலைக்கு இம்ரான் கான் அரசே காரணம் – பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் இருந்த நிலையில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்…