இனி மாநிலம் முழுவதும் இது நடத்தப்படும்… தமிழக அமைச்சர்கள் அதிரடி முடிவு!

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மற்றும் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் தலைமையில் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் விவசாயிகள், வேளாண் வர்த்தகர்கள், வேளாண் ஏற்றுமதியாளர்கள், வேளாண் தொழில்சார்ந்த கோழிவளர்ப்பு, மீன் வளர்ப்பு, உணவு பதப்படுத்துதல் சார்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, தங்கள்கருத்துக்களைதெரிவித்துள்ளனர்.

இதுபோன்று, விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்நிறுவனங்கள், விவசாயச் சங்கப்பிரதிநிதிகள், வேளாண்விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள் உள்ளிட்ட வேளாண்மையில் ஈடுபட்டுள்ள அனைத்துத்தரப்புமக்களின் கருத்துக்களை கேட்டறியும் வகையில், மாநிலத்தில் கருத்துக்கேட்புக் கூட்டங்கள் விரைவில் நடத்தப்படவுள்ளன. இதுமட்டுமல்லாது, காணொலிக்காட்சிகள் மூலமாகவும், அனைத்துப் பிரிவுகளைச் சார்ந்துள்ள மக்களிடமிருந்தும் கருத்துக்களை பெறுவதற்கு வேளாண்மை- உழவர்நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் நடத்தப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாட்களில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அனைத்துக்கருத்துக்களும்தொகுக்கப்பட்டுவருகின்றன.

மேலும் இத்தகைய கூட்டங்களில் கலந்துகொள்ள இயலாத மக்களும் தங்களின் கருத்துக்களை அரசுக்கு தெரிவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அதற்கான தீர்வு குறித்து தங்களின் கருத்துக்கள், அறிவுரைகள் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை வேளாண்சார்ந்த பொதுமக்கள் அரசுக்குகடிதம் அல்ல மின்னஞ்சல் அல்லது வாட்ஸ்ஆப் தொலைபேசி எண்அல்லது இதரசமூகஊடகங்கள் மூலம் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடிதம்அனுப்பவேண்டியமுகவரி:
வேளாண்மைஉற்பத்திஆணையர் (ம) அரசுச்செயலர்,
வேளாண்மை – உழவர்நலத்துறை,
தலைமைச்செயலகம்,
புனிதசெயின்ட்ஜார்ஜ்கோட்டை,
சென்னை – 600 009.

  1. மின்னஞ்சல்முகவரிagrisec@tn.gov.in agrisec@tn.gov.inஅல்லதுagrips@tn.gov.in agrips@tn.gov.in
  2. வாட்ஸ்ஆப்மூலம்தகவல்தெரிவிப்பதற்கானதொலைபேசி:9384876300
  3. டிவிட்டர்மூலம்தெரிவிப்பதற்கு @ agridept_tn
  4. ‘உழவன்ஆப்’-இல்“பட்ஜெட்கருத்துக்கள்” என்றசேவையின்கீழ்பதிவுசெய்யலாம்.
    2022-23 ஆம்ஆண்டிற்கானவேளாண்நிதிநிலைஅறிக்கையானது, விரைவில்தாக்கல்செய்யப்படும்என்பதால், விவசாயிகள், உழவர்உற்பத்தியாளர்நிறுவனங்கள், விவசாயச்சங்கப்பிரதிநிதிகள், வேளாண்விஞ்ஞானிகள், ஏற்றுமதியாளர்கள்உள்ளிட்டஅனைத்துப்பிரிவுமக்களும்தங்களின்மேலானகருத்துக்களைஅரசுக்குமேற்காணும்ஏதாவதொருஊடகம்மூலம்தெரிவிக்குமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.

கடலூரில் கொட்டி தீர்த்த கன மழையால் வாழை மரங்கள் சேதம்: இழப்பீடு வழங்க வேல்முருகன் கோரிக்கை !!

தமிழகத்தில் நெல் சாகுபடிக்கு அடுத்தப்படியாக அதிகமாக பயிரிடப்படுவது வாழையாகும். இந்தியாவிலேயே அதிகப்படியாக வாழை…