இனி இம்மியளவுக்கு இடமில்லை… ஆவின் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு போட்ட அமைச்சர்!

தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அமைந்துள்ள ஆவின் இல்லத்தில் பால்வளத்துறை அமைச்சர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. சென்னை நந்தனத்தில் உள்ள அலுவலகத்தில் இன்று மாலை மாலை 3.00 மணிக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் தலைமையில் பால்வளத்துறைக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேலாண்மை இயக்குநர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் அவர்கள் வரவேற்புரையும், ஆணையர், பாலுற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அவர்கள் முன்னிலை உரையும் வழங்கினார் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை, தலைமைச் செயலகம் அவர்கள் சிறப்புரை ஆற்றி ஆய்வு கூட்டத்தை தொடங்கிவைத்தார்.

தற்போதைய அரசு பொறுப்பேற்றவுடன் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலையை ரூ.3.00 குறைத்து ஆணையிட்டதன் அடிப்படையில் பால் விற்பனை நாளொன்றுக்கு 2இலட்சம் லிட்டர் அதிகரித்துள்ளதாகவும், இந்நிலை இப்படியே தொடர்வதாகவும் மேன்மேலும் பால் விற்பனையில் முன்னேற்றம் ஏதும் இல்லை என்றும் பால் விற்பனையினை அதிகரிக்க தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தனியார் பால் விற்பனை விலை அதிகரித்துள்ளதால் ஆவின் பால்விற்பனை அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின்பல்வேறு தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் மிகவும் குறைவாக இருப்பதை சுட்டிக்காட்டிய அமைச்சர் நாசர், அண்டை மாநிலமான கேரளாவில் பால் கொள்முதல் விலை அதிகமாக இருப்பதனால், கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள தேனி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பாலை வழங்காமல் கேரளாவிற்கு விற்பனை செய்கிறார்கள் என்றும் பால்வளத்துறை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்உறுப்பினர்களுக்கு வழங்கும் சலுகைகளை எடுத்துக்கூறி இவ்வாறு அண்டை மாநிலத்திற்கு பால் விற்பனை செய்வதை தடுத்து, தமிழ்நாட்டின் பால் கொள்முதலை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகதொடர்புடைய பொது மேலாளர்களும், துணைப் பதிவாளர் (பால்வளம்)களும் பதில் சமர்ப்பித்தனர்.

சென்ற வருட மார்ச் 2021 மற்றும் இவ்வருட மார்ச் 2022 பால் கொள்முதலை ஒப்பீடு செய்யும் போது கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியளார்கள் ஒன்றியம் தினசரி 3.409 லிட்டர் குறைவாக பால் கொள்முதல் செய்துள்ளது, இது சென்ற ஆண்டை விட 49% குறைவாகும். அதேபோல, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு ஒன்றியங்கள் முறையே 28% மற்றும் 21% குறைவாக பால் கொள்முதல் செய்துள்ளன. மேலும், மார்ச் மாத 2022 பால் கொள்முதல் இலக்குடன். மார்ச் மாத சராசரி பால் கொள்முதலை (10.03.2022 வரை) ஒப்பிடும் போது கன்னியாகுமரி ஒன்றியம் 66%, திருநெல்வேலி 58%, கோயம்புத்தூர் 57%, காஞ்சிபுரம்-திருவள்ளூர் 47%,. தூத்துக்குடி 46% சிவகங்கை 44% ஆகிய ஒன்றியங்களில் குறைவாக பால் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

சங்கங்களில் இருந்து தனியாருக்கு பால் விற்பனை செய்யப்பட்டால் உடனடியாக நிறுத்தம் செய்யப்பட வேண்டும்.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மேலும் தரமான பாலினை மட்டுமே உறுப்பினர்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் என தெரிவித்த அமைச்சர், சங்க அளவிலான 30.09.2021 அன்றைய தேதிய பால் கொள்முதல் அளவை 10.03.2022 அன்றைய தேதிய பால் கொள்முதலுடன் ஒப்பிட்டு குறைவான பால் கொள்முதலுக்கான காரணங்களை பொது மேலாளர்கள் மற்றும் துணை பதிவாளர்கள் (பால்வளம்) ஆகியோரிடம் விரிவான ஆய்வு நடத்தினார்கள் 30 சதவித்திற்கும் மேல் பால் உற்பத்தி குறைந்த சங்கங்கள் மீது தொடரப்பட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரத்தை 10 நாட்களுக்குள் தெரிவிக்க உத்தரவிட்டார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகை நாட்டிகளில் பால் உப பொருட்கள் விற்பனையில் சுமார் ரூ.82.00 கோடி அளவுக்கு விற்பனை செய்து சாதனை எய்திய விபரம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பாரட்டினை பெற்றது எனவும், இதே போன்று திட்டமிடலுடன் செயல்பட்டால் மேன்மேலும் சாதனைகளை விற்பனையில் அடையலாம் என்று மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் கூறினார்கள். 12 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஆவின் பால் நுகர்வோரின் நலன் கருதி பால் விற்பனையில் கலப்படத்திற்கு இம்மியளவும் இடமளிக்காமல் கண்காணிக்கவும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக நுகர்வோர்களுக்கு விற்காமல் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *