இனி அனைத்து மொழிகளிலும் பெரியாரின் பெயர் சொல்லும் புத்தகம் இருக்கும் 

தமிழக சட்டப்பேரவையில் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான தமிழக  பட்ஜெட் அறிக்கையை  நிதி அமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று வெளியிட்டார்.

பல சிறப்பம்சங்களை  கொண்ட இந்த அறிக்கையில் பெரியாரின்  சிந்தனைகளான  பெண்ணடிமை, மூடநம்பிக்கை, சமூக நீதி போன்ற  கருத்துக்களை உள்ளடக்கத்தை கொண்ட  புத்தகத்தை  தமிழில் மட்டும் இல்லாமல் இந்திய மொழிகள் அனைத்திலும் சென்றடைய வகையில்  தமிழக அரசு செயல்படும் என்று குறிப்பிட்டிருந்தார். மேலும் இதற்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 21 இந்திய மொழிகளில் வெளியிட  திட்டமிடப்பட்டுள்ளது.  இதன் மூலம் பெரியாரின்  எழுத்துக்கள்  காலத்தை கடந்து  அனைவரும் பயனடையும் நோக்கில் இருக்கும்  என பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

இந்த பட்ஜெட் அறிக்கையை குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கும் நிலையில் காங்கிரஸ் எம்,பி ஜோதிமணி அவர்கள்  பேசுகையில் பெரியாரின்  சிந்தனைகள் இந்தியா முழுவதும் சென்றடைய  ஒன்றிய அரசின் முயற்சி திட்டத்திற்கு  என்னுடைய  பாராட்டுக்கள் என தெரிவித்துள்ளார்.

இந்த  பட்ஜெடை   பற்றி அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் 

டி டி வி தினகரன் பேசுகையில் இந்த பட்ஜெட் வெற்று அறிக்கை என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் திமுக தேர்தலின் போது அறிவித்த எந்த திட்டங்களையும்  அமல்படுத்தாமல் இந்த  பட்ஜெட்டில் முடித்து உள்ளனர் . பெண்களுக்கான மாத தொகை ரூ 1000 வழக்கும் திட்டம் என மக்கள் எதிர்பாக்கும் எந்த திட்டத்தையும் இந்த    பட்ஜெட்டில் இடம் பெறாமல் இருப்பது ஏமாற்றமே என்று குற்றம் சாட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *