பட்ஜெட்டில் சிறப்பிக்கப்பட்ட ‘பேராசிரியர் அன்பழகன்’ பெயர்… அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதிரடி திட்டம்!

பேராசிரியர் அன்பழகன் பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் அனைத்து அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்குவதற்கான ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்’ என்ற மாபெரும் திட்டத்தை அரசு செயல்படுத்தும். இத்திட்டத்தில், அரசுப் பள்ளிகளில், தேவையான கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 18,000 புதிய வகுப்பறைகள் கட்டப்படும். மேலும், மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப,தொடக்கப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளும் (Smart Classrooms), இதரப் பள்ளிகளில் அதிநவீன கணினி ஆய்வகங்களும் உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சமூக சீர்திருத்தவாதி பெரியார் ஈ.வெ.ராமசாமியின் எழுத்துக்களை 21 மொழிகளில் மொழி பெயர்க்க அரசு 5 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.